சைவம்

“இன்னைக்கு ஏழு மணிக்கு பார்டி இருக்கு கிருஷ்ணா,
” அப்படியா?”
“ஆமா”
எங்க?
“தி. நகர்ல முராரி ஓட்டல்ல,
“ஓ”
நீங்க நம்ம பிரண்ட் மகேஷ்–
மாரி எல்லாரையும் வரச் சொல்லிருங்க
ஓ.கே பிரகாஷ் என்று சந்தோசமாக பதில் சொன்னார் கிருஷ்ணா.
நகரும் ஒவ்வொரு மணித்துளியும் கிருஷ்ணாவிற்குள் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
” பிரகாஷ்”
“ம்”
“பார்டி எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?
என்னடா கேக்கலையேன்னு பாத்தேன் நம்ம பிரண்ட் குரு இல்ல
“ஆமா”
“அவரு பிராஜெக்ட் விசயமா நம்ம கம்பெனிக்கு வந்தாரில்ல
“எஸ் “
அதுக்குத் தான்
ஓகே ஓகே எல்லாம் உண்டா?
” இல்லாமலா நீங்க பூந்து வெளையாடலாம் என்று சந்தோசமாகச் சொன்னார் பிரகாஷ்.
எப்ப கௌம்பணும் பிரகாஷ்
” ஒரு ஆறு ஆறரைக்கு கௌம்பலாமா?
“ஓகே
கிருஷ்ணாவின் கைகால்கள் இப்போதே தரையில் நில்லாமல் சதிராடின . நகரும் நொடிகள் ஒவ்வொன்றும் வரும் ஏழு மணியின் எதிர்பார்பில் கரைந்து கொண்டே போனது.
” பிரகாஷ் பார்டிக்கு யார் யார் வாரங்க,
“ம்… மாரிமுத்து, கண்ணன் ரெண்டு பேர மட்டும் தான் அப்பெறம் நீங்க நான் குரு மட்டும் தான்.
ஓகே பிரகாஷ் ஏதாவது பார்டி அப்படி இப்படின்னா தான் மொகமே பிரகாசமாகுது. இன்னைக்கு சமாய பண்ணிரலாம் கிருஷ்ணாவின் வார்த்தைகளில் அப்போதே இறக்கம் தெரிந்தது
கடக்கும் நொடிகளை ரொம்பவே கலவரப்பட்டு நகர்த்திக் கொண்டிருந்தான் கிருஷ்ணா
ஒரு வழியாக மணி ஆறரையைத் தொட்டதும் புது உற்சாகம் வந்தது கிருஷ்ணாவுக்கு
என்ன பிரகாஷ் கௌம்பலாமா?
“ம்… ஓகே…
“எப்படி …. மோட் ஆப் வே?
என்னோட கார்ல போகலாம் அப்படியே மாரிமுத்துவையும் கண்ணனையும் கூப்பிட்டுக்கலாம் என்றார் பிரகாஷ்.
ஓ.கே. என இருவரும் காரில் ஏறிப் பறந்தார்கள். கார் மவுண்ட் ரோட்டிலிருந்து கிளம்பியது.
“பிரகாஷ்”
“ம்”
“எந்த ஓட்டல் முராரி தி. நகர்ல இருக்கு.
“மாரிமுத்து கண்ணன் ரெண்டு பேரையும் கூட்டிட்டு போயிரலாம்.
ஓ.கே என கார் தி. நகரில் போய் நின்றது.
இங்க தான் கண்ணன், மாரி எங்க இருக்காங்களா?
“ஆமா “
காரை நிறுத்தி விட்டு பிரகாஷ் போன் செய்தார்.
என்ன மாரி எங்க இருக்க?
இங்க பக்கத்தில் தான்
சீக்கிரம் வா.
“ம்”
“ஓகே என போனை கட் செய்தார்’.
‘பிரகாஷ்”
“ம்”
“நான் வெஜ் இருக்குமா?
ஓ தாராளமா கெடைக்கும் .நீங்க என்ன வேணும்னாலும் சாப்பிடலாம் கிருஷ்ணாவின் மனதுக்குள் நடமாடியது உற்சாகம். கொஞ்சம் நேரத்தில் அத்தனை பேரும் மங்கிய விளக்குகள் எரியும் அந்த முராரி ஓட்டலில் உள்ளே நுழைந்தனர்.
கிருஷ்ணா என்ன சாப்பிடுறீங்க?
“ம்… எனக்கு பீர், சிக்கன்
குருவுக்கும் பீர், சிக்கன்
பிரகாஷ் ஒங்களுக்கு
ம்ஹுகும் எனக்கு வேணாம்
நான் ப்யூர் நான் வெஜ்
கண்ணன் ஒங்களுக்கு
அய்யய்யோ அவரு ஐய்ப்ப பக்தர்
மகேஷ் நீங்க?
ம்ஹுகும் …. எனக்கு அசைவம் ஆகவே ஆகாது.
ஆமாங்க அவரு  சைவ பக்தர்
என்னங்க பார்டின்னு கூட்டி வந்தா யாரும் கம்பெனி குடுக்க மாட்டீங்கிறீங்களே
“இல்ல சார் நாம எதுவும் பழகல. அதிலயும் நான்வெஜ்னா அறவே ஆகாது என்றார் பிரகாஷ்
“அப்பெறம் என்ன சாப்பிடுறீங்க?
“எனக்கு ஆப்பிள் ஜுஸ் அவங்களுக்கும் ஆப்பிள் ஜுஸ்
“ஓ.கே. வேற
கிருஷ்ணா ஒங்களுக்கு வேற எதுவும் வேணுமா?
“இல்ல வேணாம் எனக்கு பீர், சிக்கன் போதும்
பிரகாஷ் தான் வேணாம்னு சொல்றாரு.
சரி பழக்கமில்லையில்ல
ஆமாங்க ஒரு உசுர கொன்று சாப்பிடுறத பாவம் தலையைச் சொறிந்து கொண்டே சொன்னார் பிரகாஷ்
மங்கிய விளக்கொளியில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
குரு,
சொல்லுங்க பிரகாஷ்
எனக்கு பார்சல் வேணும்
என்ன இப்படி சொல்லீட்டீங்க
என்ன வேணுமோ வாங்கிக்கங்க
ஏப்பா இங்க வா காடவறுவல், கிரில் சிக்கன், மூளை ப்ரை, போட்டி, ரெண்டு ஆம்லெட், நண்டு கொழம்பு இதெல்லாம் பார்சல் பண்ணு . பிரகாஷ் சொல்லி முடித்ததும் குருவிற்கும் கிருஷ்ணாவிற்கும் ஒரு கிறக்கமே ஏற்பட்டது.
ஏங்க உயிர்கள கொல்றது பாவும் நான் நான்வெஜ் சாப்பிட மாட்டேன்னு பிரகாஷ் சொன்னாரே
ஆமால்ல என்று வாய் பிளந்தார்
குரு
நீங்க சைவம் தான பிரகாஷ் .
ஆமாமா நான் சைவம் தான். வீட்டுல இருக்கிறவங்க அசைவம் சாப்பிடுவாங்களே .அதான்
என்றார் பிரகாஷ்
அடப்பாவி நம்ம கூட சேந்து சாப்பிட்டுருந்தா இவ்வளவு சாப்பிடுருக்க முடியாது. இவ்வளவு பில்லு வச்சுட்டாரே”
என்று பயந்து நடுங்கினார் குரு
நான் சைவம் தான். நான் அசைவத்த தொடவே மாட்டேன் என்றார் பிரகாஷ்
ஆனால்….  ஆனால்….
அவரின் கையில் மொத்த அசைவ உணவுகளும் பார்சலாய் இருந்தது.

ராஜா செல்லமுத்து