யுனெஸ்கோ தலைவராக பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் ஆட்ரி அசூலே நியமனம்

நியூயார்க்,நவ.12–
ஐ.நா சபையின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் யுனெஸ்கோ அமைப்பின் தற்போதைய  தலைவர் இரினா போவாகோவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவரை  தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கலாச்சார துறை அமைச்சர் ஆட்ரி  அசூலேவின் பெயர் முன்மொழியப்பட்டது.
யுனெஸ்கோ தலைவராக பதவி வகிக்க அசூலே தகுதியானவர் என்பதால் அவரை தலைவராக  தேர்ந்தெடுத்துள்ளதாக நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து, வரும்  15-ம் தேதி அசூலே தலைவராக பொறுப்பேற்க உள்ளார். 2016 முதல் 2017 வரை  பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரதுறை அமைச்சராக பதவி வகித்த அசூலே,  யுனெஸ்கோவின் தலைமை பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் என்பது  குறிப்பிடத்தக்கது.