நவீன கருவிகளை கொண்டு தென்னை மரம் ஏறும் பயிற்சி

வத்தலக்குண்டு,நவ.12–
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் உள்ள டெர்ரா மஹாலில் திண்டுக்கல் தென்னை உற்பத்தியாளர்கள் கம்பெனியும் இந்திய தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து நடத்தும் விவசாய தொழிலாளர்களுக்கான தென்னை மரம் ஏறும் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் தென்னை மரம் ஏறும் பயிற்சி நவீனகருவிகளை கொண்டு எளிமையான முறையிலும் பாதுகாப்பாகவும் மரம் ஏறுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு 40 நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் மதிப்பில் நவீன கருவியும் விபத்து காப்பிட்டாக இரண்டு வருடங்களுக்கு 2 லட்சத்திற்கான காப்பிடு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தென்னை வளர்ச்சி கப்பெனி தலைவர் முருகேசன் தலைமை வகித்து நவீன கருவி, காப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.
அவர் கூறும்போது:–
தென்னை உற்பத்தி தற்போது மிகவும் நலிவுடைந்து வருகிறது. எனவே தென்னை உற்பத்தியை பெறுக்குவரும் உற்பத்தியில் நல்ல தரமான காய்கள் உற்பத்தி செய்ய பராமரிப்பு அவசியம் குறித்தும் தென்னை மரத்திற்கு சொட்டு நீர் பாசனம் மிகவும் அவசியம் சொட்டு நீர் பாசனமே போதுமானதாகும் ஒரு தொழிலாளி தென்னை மரத்தில் ஏறி தேங்காய் வெட்டுவது மட்டுமே தொழிலாக இருக்க கூடாது மரத்தைப்பற்றிய முழு விவரமும் அறிந்து இருக்க வேண்டும் அதை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை ஈடவேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தென்னை உற்பத்தியாளர் கம்பெனி இயக்குநர்கள் சீனிவாசன், தேன்நிலா, ஜெயவீரபாண்டியன், தாதன், லிங்கையன், ஜெகதீசன், காசி, செல்வராஜ், ராஜேந்திரன், மற்றும் தென்னை விவசாயிகள், தென்னை தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.