யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கையேடு;

சென்னை, நவ. 11–
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஊழல் தடுப்பு விழிப்புணர்வை மக்களுக்கும், ஊழியர்களுக்கும் ஏற்படுத்த, மத்திய ஊழல் தடுப்பு வாரியம் ஆணைக்கு ஏற்ப, ‘‘ஊழல் இல்லாத இந்தியா’’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கையேட்டைத் தயாரித்துள்ளது. இதை சேர்மன் எம்.என்.சர்மா வெளியிட்டார்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மத்திய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் இதன் பொது மேலாளர்கள் கே.கோவிந்தராஜன், ஜே.எஸ்.தகியா ஆகியோர் ஊழல் தடுப்பு உறுதி மொழியை வாசிக்க, அனைத்து ஊழியர்களும் உறுதி மொழி ஏற்றனர்.
ஊழல் தடுப்பு பற்றியும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் எடுக்கப்படும் நடவடிக்கை பற்றியும் சேர்மன் எம்.என்.சர்மா விவரித்தார்.
இந்த விழாவில் ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, ஊழல் தடுப்பு கமிஷனர் ஆகியோர் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு செய்திகளை சேர்மன் எம்.என்.சர்மா வாசித்தார்.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம் கோவை, சேலம், லூதியானா, ஐதராபாத், நாக்பூர், விசாகப்பட்டினம் நகரங்களில் உள்ள யுனைடெட் இந்தியா அலுவலகங்களில் நடைபெற்றது.
நாடு முழுவதும் பல்வேறு முறையில் பிரச்சாரம் செய்துள்ளது என்றும் சேர்மன் எம்.என்.சர்மா தெரிவித்தார்.