மதுரையில் அக்மார்க் முத்திரையின் முக்கியத்துவம் குறித்த கண்காட்சி

மதுரை, நவ.11–
மதுரை தமுக்கம் மைதானத்தில் தேசிய அக்மார்க் முத்திரையின் முக்கியத்துவம் குறித்த கண்காட்சியை இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்து பார்வையிட்டார்.
மத்திய அரசின் வேளாண் விற்பனை மற்றும் ஆய்வு இயக்குநரகம் மற்றும் தமிழக அரசின் வேளாண் வணிக ஆணையரகமும் இணைந்து அக்மார்க் முத்திரையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சி இன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் துவங்கியது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், கோலபாலகிருஷ்ணன்,எம்.பி., மத்திய வேளாண் விற்பனை மற்றும் ஆய்வு இயக்குநரகத்தின் துணை வேளாண் வணிக ஆலோசகர் கோவிந்த ரெட்டி உள்ளிட்டோர் கலந்த கொண்டனர். இக்கண்காட்சியில் 90–க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் அக்மார்க் முத்திரையுடன் கூடிய உணவுப் பொருள்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பயனாளிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
கண்காட்சியில் அக்மார்க் ஆய்வகங்கள் மூலம் உணவுப் பொருள்களில் உள்ள கலப்படங்களைக் கண்டுபிடிப்பதற்கு எளிய செய்முறை விளக்கமும் அளிக்கப்படுகிறது. இக்கண்காட்சி 13–ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அனுமதி இலவசம்.