சுற்றுலா பயணிகளை துபாய்க்கு அழைத்து செல்ல புதிய திட்டம்

மதுரை,நவ.11–
யுஏஇ எக்சேன்ஞ் நிறுவனம் சுற்றுலா பயணிகளை துபாய்க்கு அழைத்து செல்லும் “டி.எஸ்.எப் பேக்கேஜ்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து யுஏஇ. எக்சேன்ஜ் நிறுவனத்தின் மண்டல மேலாளர் கார்த்திகேயன் கூறியதாவது:-
யுஏஇ. எக்சேன்ஜ் இந்தியா என்ற நிறுவனம் சுற்றுலா பயணிகளை துபாய்க்கு அழைத்து சென்று சுற்றி பார்க்கும் டி.எஸ்.எப் பேக்கேஜ் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்தாண்டு இந்நிறுவனம் 500 சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு துபாய்க்கு சென்று வந்தது. இந்தாண்டு 1000 சுற்றுலா பயணிகளை துபாய்க்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டு இருக்கிறது.
சுற்றுலா பயணிகள் தங்களது விருப்பப்படி 3 இரவு 1 பகல் அல்லது 4 இரவு 5 பகல் அல்லது 5 இரவு 6 பகல் என உரிய பயணத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இப்பயணத்தின் போது நடுக்கடலில் உணவு விருந்து, பாலவனம் பயணம், வானனாவிய கட்டிடங்கள், பகட்டான தங்க கிராமம், ஜூமரையா பள்ளிவாசல் போன்ற ஆபூர்வமான இடங்களை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி மேலாளர் பிரிமேன், பிராந்திய மேலாளர் பாலகிருஷ்ணன், கிளை மேலாளர்கள் காளிஸ்வரன், மனோசே ஆகியோர் உடன் இருந்தனர்.