எவரெஸ்ட் குருப் ரெடிமேட் ஸ்டீல் கட்டிடங்கள் பற்றிய கையேடு வெளியீடு

சென்னை, நவ.11–
ரெடிமேட் கட்டிடங்களுக்கான தேவைக்கு வேகமூட்டும் வகையில் எவரெஸ்ட் இன்டஸ்ட்ரிஸ் முன்-வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களை உற்பத்தி செய்கிறது. எவரெஸ்ட் ஸ்டீல் பில்டிங் சொல்யுஷன்ஸ், முன்- வடிவமைக்கப்பட்ட கட்டிட தொழில்நுட்பம் மீது இந்தியாவின் முதல் தொழில்நுட்ப கையேட்டை வெளியிட்டிருக்கிறது. தொழிலகங்கள், சேமிப்புக்கிடங்குகள் மற்றும் வர்த்தக கட்டிடங்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் நிலைப்புத்தன்மையோடும் கட்டுவதற்கு இது உதவுகிறது.
பிரபல கட்டிட நிபுணர்கள் சி.என். சீனிவாச ராவ், கே.எஸ்.மோனி, ஆஸ்கார் ஜி.கேன்செஸ்ஸா, எஸ்.கந்தசாமி மற்றும் பிரசாந்த் கார்ச் ஆகியோரை உள்ளடக்கிய சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டமைப்பு ஆலோசகர்கள் மற்றும் கட்டிட வடிவமைப்பாளர்கள் கொண்ட ஒரு குழுவால் முதன்முறையாக இந்த தொழில்நுட்ப கையேடு அறிமுகம் செய்யப்பட்டது.
முன்னணி ஆலோசகர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள், பொறியியலாளர்கள் செயல்திட்ட மேலாளர்கள் அரசு அமைப்புகள் மற்றும் தொழில்துறை நிபுணர்களின் கலந்தாலோசனையில் எவரெஸ்ட் நிறுவனத்தால் இத்தொழில்நுட்ப கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. முன்-வடிவமைக்கப்பட்ட ஸ்டீல் கட்டிடங்களை வடிவமைப்பது, தயார் செய்வது மற்றும் நிறுவுவதற்கான ஒரு தொழில்நுட்ப அறிமுக ஏடாகவும் மற்றும் சான்றாதார வழிகாட்டியாகவும் கட்டிட வடிவமைப்பாளர்கள், வடிவமைப்பு பொறியாளர்கள் மற்றும் கட்டுமான செயல்திட்ட மேலாளர்கள் ஆகியோரால் இக்கையேடு பயன்படுத்தப்படும் என்று எவரெஸ்ட் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனிஷ் சங்கி தெரிவித்தார். நவீன கட்டிடங்களை கட்டுவதற்கான அதிக பன்முக திறன் கொண்ட, விரைவான மற்றும் சிக்கனமான கட்டுமான வழிமுறையாக முன் வடிவமைக்கப்பட்ட ஸ்டீல் கட்டிட கருத்தாக்கம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் ரூ.5,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள இந்த தொழில்துறையானது, அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் என்ற இச்செயல்திட்டம் இத்தொழில்துறைக்கு கொண்டுவருகிற மிகப்பெரிய சாத்தியங்கள், வாய்ப்புகளின் காரணமாக இந்த வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியானது, இத்தொழில்துறையில் தொடர்ந்து இருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம். 3 உற்பத்தி தொழிலகங்களுடனும் ஒரு வலுவான வடிவமைப்பு மற்றும் கட்டுமான நிபுணர்கள் குழு மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் செயல்திட்டங்கள் பணியை முடித்து வழங்குகிறோம் என்றார் அவர்.
கடந்த 5 ஆண்டுகளில் 50 இலட்சம் சதுர அடிக்கும் அதிகமாக தொழில்துறை உட்கட்டமைப்பு கட்டுமானப்பணிகளை தென்னிந்தியாவில் நாங்கள் செய்து முடித்திருக்கிறோம். என்றார் அவர்.
இந்தியாவில் 29 மாநிலங்களில் 275 நகரங்களில் 5 கோடி ச.அடி பரப்பளவுக்கும் அதிகமாக கட்டுமானத்தை உள்ளடக்கிய 2000-க்கும் கூடுதலான செயல்திட்டங்களை எவரெஸ்ட் ஸ்டீல் பில்டிங் சொல்யுஷன்ஸ் ஏற்கனவே செய்து முடித்திருக்கிறது.
சென்னை அருகே ஆட்டோ பாகங்கள் உற்பத்தியில் பிரபலமான பன்னாட்டு நிறுவனமான மதர்சன் சுமி நிறுவனத்திற்காக மிக சமீபத்திய ஆலையின் கட்டுமானப்பணிக்கான ஆர்டரையும் இது பெற்றிருக்கிறது. இதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் கடந்த 5 ஆண்டில் பல பிராண்டுகளுக்காக, தொழிலக மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்புகளை எவரெஸ்ட் கட்டித் தந்திருக்கிறது.