உப்பு அதிகரித்தால் சிறுநீரகம், இருதயம் பாதிக்கும்;

சென்னை, நவ. 11–
நாள் ஒன்றுக்கு 5 கிராம் அளவில் உப்பு (ஒரு சிறிய ஸ்பூன்) உணவில் சேர்க்க வேண்டும். ஆனால் அனைவரும் 10 முதல் 15 கிராம் வரை உட்கொள்கிறோம் இதனால் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு ஏற்படும். டயாலிசிஸ் செய்ய வேண்டியது இருக்கும். மூளை ரத்தக்குழாய் பாதிப்பில் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பாஸ்ட்புட், நொறுக்கு தீனி பாக்கெட்டுகளில் அதிக அளவில் உப்பு உள்ளது. பிறந்த குழந்தைக்கு உப்பை உணவில் அதிகம் சேர்ப்பது பாதிப்பை ஏற்படுத்துகிறது. உணவில் உப்பு அதிகம் சேர்க்காமல் இருக்க விழிப்புணர்வுக்கு சேபியன்ஸ் ஹெல்த் நிறுவனம் சென்னை ஐ.ஐ.டி. கூட்டுடன் கருத்தரங்கு நடத்தியது. உலகப் பிரபல மருத்துவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர் என்று சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் சேர்மன் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை சேபியன்ஸ் சுகாதார அமைப்பு சார்பில் உப்பு எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.
உப்புச் சத்தை அதிகம் சேர்ப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே அனுமதிக்கப்பட்ட அளவில் உணவில் உப்பை சேர்க்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உப்பு சேர்க்கப்பட்டுள்ளதை உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் குறிப்பிடுவதை கட்டாயமாக்க வலியுறுத்தும் வகையிலும், சென்னை சேபியன்ஸ் சுகாதார அமைப்பு, சென்னை ஐ.ஐ.டியுடன் இணைந்து உப்பு எதிர்ப்பு மாநாடு நடத்தியது. இங்கிலாந்தின் வாஷ் அமைப்பின் டாக்டர் கிரகம் மேக் கிரேகர் கலந்து கொண்டார்.
ஐ.ஐ.டி. சென்னை டைரக்டர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி விழாவை துவக்கினார்.
உலக சுகாதார அமைப்பு துணை டைரக்டர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் சர்க்கரை, மாரடைப்பு, சிறுநீரக நோய்க்கு உப்பு முக்கிய காரணமாக உள்ளது என்றார்.
இந்திய உணவு பாதுகாப்பு தர சங்கம் அனிதா மகிஜினி பேசுகையில் நொறுக்கு தீனி பாக்கெட்டில் உப்பு அளவை குறைக்க வலியுறுத்தப்படும் என்றார்.
ஐ.ஐ.டி. பேராசிரியர் முரளீதரன் பேசுகையில், அரசு சட்டப்பூர்வமாக உப்பு பற்றி தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விவரித்தார்.
ஐரோப்பிய ‘வாஷ்’ (உலக உப்பு, உடல் ஆரோக்கிய செயல் அமைப்பு) அமைப்பின் பேராசிரியர் கிரகம் மேக் கிரேகர் பேசுகையில், உலக அளவில் உப்பு உட்கொள்ளுவதை குறைக்க தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இவர் ஐரோப்பிய ரத்த அழுத்தம் அமைப்பின் தலைவராக உள்ளார். இவர் லண்டன் உல்ப்சன் பல்கலைக்கழக இருதய ரத்தக்குழாய் அமைப்பு பேராசிரியராக உள்ளார்.
இவர் ‘கேஷ்’ அமைப்பின் சேர்மனாக உள்ளார். இவர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவற்றுக்கு உப்பு மற்றும் பொட்டாசியம் உட்கொள்வதில் பாதிப்பு பற்றி ஆராய்ச்சி செய்கிறார்.
நொறுக்கு தீனி மசாலா சிப்ஸ், ஊறுகாய், உருளை பிரெஞ்ச் பிரை, போன்றவை மட்டுமின்றி வீட்டில் தயாரிக்கப்படும் ரசம், சாம்பாரில் அதிக உப்பு சேர்க்கப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இவைகளில் அதிக சோடியம் இருப்பதால் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, பக்கவாதம் நோய் ஏற்படுகிறது என்றார் சேபியன்ஸ் ஹெல்த் சேர்மன் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன்.    ஐரோப்பிய வாஷ் என்னும் உப்பு மற்றும் அதனால் ரத்த அழுத்தம் என்னும் உலக செயல்பாடு அமைப்பு சென்னையில் உப்பு உபயோகம் பற்றிய ஆய்வை நடத்தியது. 35% இளைஞர்கள் குண்டாக உள்ளர். 20% இளைஞர்கள் மட்டுமே நொறுக்கு தீனியில் உப்பு உள்ளதை பற்றி அறிந்துள்ளர். உணவில் எவ்வளவு உப்பு இருக்க வேண்டும் என்று 30% இளைஞர்கள் மட்டுமே அறிந்துள்ளனர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது என்றார் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன்.
உடலில் ரத்தத்தில் உப்பு அளவு அதிகரித்தால் ரத்த அழுத்த நோய் ஏற்பட்டு, பிறகு மாரடைப்பு உண்டாக்குகிறது. மூளை ரத்தக்குழாய் அடைப்பால் பக்கவாத நோய் ஏற்படுகிறது என்று ஐரோப்பிய கிரகம் மேக் கிரேகர் தெரிவித்தார்.  நாம் உணவில் உப்பை 10 நாள் குறைத்தால், நாக்கில் உப்பு உணர்வு அறிபவை, உப்பு இல்லாமல் பழகி வருகின்றன.
சிறுவர், இளைஞர்கள் அளவில் உப்பு உபயோகத்தை பெற்றோர்கள் குறைத்தால், அவர்களுக்கு பெரியவர் ஆனாலும் இருதய, சிறுநீரக, பக்கவாத பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என்றார் டாக்டர் ராஜன்                   ரவிச்சந்திரன்.