சாமர்த்தியம்

அன்றும் பெண்பாரக்க வந்தவர்கள் நித்யா விடம் அதே கேள்விகளைக் கேட்டனர்.
எங்கே வேலைப்பார்க்கிராய் ? எவ்வளவு வருட அனுபவம்? எவ்வளவு சம்பளம் ?அமெரிக்கா சென்று விட்டு வந்திருக்கிறயா? சமீபத்தில் பதவி உயர்வு கிடைக்குமா ?அடிக்கடி வெளிநாடு செல்ல அனுமதிப்பார்களா? காரோட்டத் தெரியுமா? சமையல் வீட்டு வேலைகள் எல்லாம் செய்யத் தெரியுமா ? வங்கியில் எவ்வளவு சேமிப்பு உள்ளது. பிளாட் ஏதும் வாங்கியாயிற்று. ஒரே பெண்ணாய்  உள்ளதால் பெற்றோர் திருமணத்திற்கு பிறகு எங்கு யாருடன் இருப்பாய் என்று மூச்சு விடாமல் கேட்டு முடித்தார்கள்.
அமைதியாக கேள்விகளைப் பொறுமையாகக் கேட்ட நித்யா ‘‘ வங்கியில் பத்து லட்சம் இருப்பு உள்ளது. எல்லா சாதனங்களுடன் கூடிய தனிவீடு வேலை செய்யும் கம்பெணிக்கு நடந்து போகும் தூரத்தில் உள்ளது. ஒரு வேன் கார் உள்ளது. திருமணத்திற்கு பின்அந்த வீட்டில் எங்கள் அம்மா அப்பா இருவரும் என்வீட்டில் தனியாக இருப்பார்கள் என்றாள் .
பையனின் அம்மா மேலே பார்க்க அப்பா கீழே பார்த்தார்.
பையன் மட்டும் நித்தியாவின் அழகைப் பார்தது அசந்து போய் பெண்ணை எனக்கு மிகவும் பிடிதிருக்கிறது என்றான்.
நித்யாவின் அப்பா மாப்பிளையிடம் எங்கு படித்தீர்கள்? தற்போது எந்தக் கம்பெனியில் வேலை
செய்கிறீர்கள் ?என்றார்.
அதற்குள் நித்யா அப்பா நான் அவரிடம் தனியாக பேச வேண்டும் என்றார்.
உடனே பையன் நித்யாவிடம் எங்கு போய் பேசுவது என்றார்.
மாடியில் உள்ள என் அறைக்குப் போகலாம் என்றாள்.
உடனே நித்யாவுடன் பையன் மாடிக்குப் போனார்.
நித்யா அவரிடம் ‘‘ உங்கள் அம்மா என்னிடம் பத்து கேள்விகள் கேட்டார்கள். ஆனால் நான் உங்களிடம் நான் இரண்டு கேள்விகள் மட்டும் கேட்பேன். மறைக்காமல் பதில் சொல்ல வேண்டும் ’’ என்றாள் நித்யா.
தலையாட்டினான்.
‘‘ நீங்கள் என்ன பிராண்ட் சிகரெட் புகைப்பீர்கள்? என்ன மதுபானம் அருந்துவீர்கள்? பீர், பிராந்தி விஸ்கி, ரம், ஜீன், ஓயின், ஓட்கா? என்றாள்.
‘‘எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் எப்போதவது பார்ட்டிக்குப் போனால் நண்பர்களுக்கு கம்பெனி கொடுக்க பில்டர் சிகரெட் புகைப்பேன். தினசரி இரவு இரண்டு பெக் ஒட்கா சாப்பிட்டால் தான் எனக்கு தூக்கம் அமைதியா வரும் என்றார்.
மிக்க நன்றி என்று கூறி கீழ் அறைக்குச் சென்றாள்.
பையனின் அப்பாவை அழைத்தாள் .
ரகசியமாக அவர் காதில் ‘‘உங்கள் குடிகாரப் பையனை எனக்கு படிக்கவில்லை என்று சொன்னாள்.
அவர் வெளியே வந்து நித்யாவின் அப்பா விடம் வீட்டிற்குச் சென்று பையனின் முடிவு கேட்டு போன் செய்கிறோம் என்று சொல்லிவிட்டுப்  புறப்பட்டனர்.
அடுத்த நாள் ஆபிஸ் சென்ற நித்யாவிடம் தோழி அமுதா தனக்கு ஒரு அண்ணன் இருப்பதாகவும் அவன் நித்யாவை மிகவும் விரும்புவதாகவும் கூறினாள்.
ஆனால் அவனுக்கும் புகை, மது பழக்கம் உள்ளது. நீ மனது வைத்தால் அவனை சுலபமாக திருத்தி விடலாம். அதற்கு ஒரு ரகசியம் உன்னிடம் சொல்கிறேன். உன் சாமர்த்தியத்தால் அவனைத் திருத்தி உன் வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்றாள்.
நீ எதிர் பார்க்கும் பையன் இந்த காலத்தில் எங்கும் எளிதில் கண்டு பிடிக்க முடியாது என்று உன் பெற்றோரிடம்
சொல் .அப்போது தான் உனக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். இல்லையென்றால் முதிர் கன்னியாய் கனிந்து விடுவாய் என்றாள்.
நித்யா யோசிக்க ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் அமுதா தன் அண்ணன் அசோக் மற்றும் பெற்றோருடன் பெண்பார்க்க வந்தாள்.
நித்யா இரண்டு கேள்விகள் மட்டும் கேட்டாள்.
எனக்கு புகையும் மதுவும் சுத்தமாக பிடிக்காது என்றார்.
ஒன்றும் பேசாமல் திருமண தேதியை முடிவு செய்து கோவிலில் திருமணத்தை முடித்து ஹோட்டலில் ரிசப்சன் வைத்தார்கள். முதல் இரவை மட்டும் அசோக்கின் வீட்டில் வைத்தார்கள்.
நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொண்டு சிறிது நேரம் கழித்துப் படுக்கை அறையில் காத்துக்கொண்டிருந்த நித்யாவின் அருகில் அமர்ந்து சாரி நித்யா நாளையிலிருந்து சீக்கரம் படுக்க வந்து விடுவேன் என்றார்.
புகை மற்றும் மது வாடை நித்யாவிற்கு பிடிக்காததால் உடனே அசோக் மீது வாந்தி எடுத்து விட்டாள்.
அசோக் உடைமுழுவதும் வாந்தி நாற்றம் .
அவன் குடித்த மதுவின் போதை முழுவதும் தெளிந்து ‘‘என்ன நித்யா இப்படி செய்து விட்டாய் என்றுகேட்டுவிட்டு குளியறைக்குச் சென்று ஒருமுறை குளித்து விட்டு உள்ளே படுக்கைக்கு வந்து படுத்தான்.
மறு நாள் காலை அமுதாவிடம் நித்யா திடீரென்று என் மீது வாந்தி எடுத்து விட்டாள். அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்று என்ன என்று சோதனை செய்து வரவேண்டும் என்றார் அசோக்.
அமுதாவுக்குத்தான் அந்த ரகசியம் தெரியுமே .அதனால் சரி என்று சொல்லி நித்யாவை வெளியே அழைத்துச் சென்று விட்டுவந்து அசோக்கிடம் அவளுக்கு புகை மற்றும் மது வாடை அலர்ஜி என்று டாக்டர் சொன்னார் என்று சொல்ல அசோக் மெல்ல அதிர்ச்சியடைந்தான் .அன்று இரவு புகை, மது இல்லாமல் படுக்கைக்கு வந்தார்.
நித்யா நேற்று பாக்கி வைத்த இன்பதையும் சேர்த்து இன்று அசோக்கிற்கு அளித்து அசத்தினாள்.அசோக்கிடம் இனிமேல் இது சுத்தமாக வந்தால் இருவருக்கும் இன்பம் அதிகமாக இருக்கும் என்று சத்தியம் செய்து
கூறினாள் .மனைவியின் கோரிக்கை நியாயமானது தான் என்று சிந்தித்த அசோக் இன்று முதல் இனி நான் புகை பிடிக்க மாட்டேன் மது அருந்த மாட்டேன் என்று நித்யா தலை மீது சத்தியம் செய்தார்.
அடுத்த நாள் இருவரும் தேன் நிலவிற்காக கோவாவிற்குப் பயணம் ஆனார்கள். அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் புகை மற்றும் மது வாடை அதிகமாக இருந்ததால் வேறு ஒரு நல்ல ஹோட்டலுக்குச் சென்று தங்கி இன்பமாக தேன் நிலைக் கழித்தார்கள்.
அப்போது தான் அன்று அமுதா நித்யா காதில் சொன்ன ரகசியம் நினைவுக்கு வந்தது. சாமர்த்தியமாக கணவனை திருத்திய நித்யா தன் பெற்றோரிடம் ஊருக்கு வந்ததும் தன் செய்கையைச் சொல்ல இருவரும் நித்யாவிற்கு நல்ல கணவன் அமைந்துவிட்டார் என்று மகிழ்ந்தார்கள்.

கோவிந்தராம்