டப்மாஸ்

“ஹலோ”
“ஹலோ”
இப்ப நீங்க பாக்கப்போறது ஒரு அழகான பாட்டு”
“ஆமா” ரொம்ப அழகான பாட்டு
“மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழதி பாடுதய்யா”
என்ற பாடல் என்று ஒரு பக்கம் விஷாலியும் விமலும் வரிந்து கட்டிக் கொண்டு பாட ஆரம்பித்தார்கள்.
காதில் இயர் போனை மாட்டிக் கொண்டு, வாயின் முன்னால் மைக்கை வைத்து மலையோரம் மாங்குருவி பாடலை முதலில் விமல்பாடிக் கொண்டிருந்தார்.
மகராசன் உன் மனசை ராப்பகலா எம்மனசு தேடுதய்யா  என்றுவரியை விஷாலி பாடினாள்.
இருவரும் டப்மாஸில் மாறி மாறிப் பாடிக்கொண்டிருந்தானர். இருவரம் லயித்து லயித்துப் பாடிக் கொண்டிருந்தார்கள் இது பேஸ்புக்கில் பதிவிறக்கம் செய்யப்பட்டது.
எத்தனையோ பேர் லைக் கமெண்டு கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இருவரும் பாடுவதை விடுவதாகத் தெரியவில்லை. பாடலில் வயித்துப் போய்க்கிடந்தார்கள்.
” ஏய் … ஏன்பா இதெல்லாம் தேவையா?
இருக்கிற பிரச்சினையில ..இது வேறயா?
டேய் யார்டா நீங்க?
சும்மாவே இருக்க மாட்டீங்களாடா
“ஐயோ”
“ஆவேசம்”
இப்படியாய்க் குவிந்தன  கமெண்டுகள் பட்டைப்பாடி முடித்தார்கள்.
அவ்வளவாக குரல் சரியாக இல்லை.என்றாலும் அவர்களின் தைரியம் அவர்களுக்கு வழிகாட்டியது. தன்னம்பிக்கை கொண்டு பாடிக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த டப் மாஸில் வடிவேலின் வசனத்தில் கவனம் செலுத்தியிருந்தாள் விஷாலி
” நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம் …. விட்டா கிறுக்கனாக்கிப் புடுவானுக போல. இந்த வசனத்தை வடிவேலின் பாணியில் இதே முகபாவனையில் சொல்லியிருந்தாள் . இதையும் பேஸ்புக் ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர்
கமேண்ட்ஸ் , லைக் எனப்பறந்தன. இந்த உற்சாக வரவேற்பு விஷாலியையும் விமலையும் அடுத்தடுத்து வேலைகளில் நுழைய உற்சாகப்படுத்தியது.
விமல் என்னைய பிடிச்சிருக்கா?
இல்ல என்ற பதிலை விமல் அழகான முகபாவனையோடு சொல்லியிருந்தான்.
ஏன் நான் அழகாயில்லையா?
“இல்லையே”
அப்பெறம் ஏன்?”
“இல்ல” என்ற பதிலையே மறுபடியும் பதிவு செய்திருந்தான்
“விமல்”
“ம்”
“வாழ்க்கைன்னா அது உன்கூடத்தான் .இல்ல நான் உசுரோடவே இருக்க மாட்டேன்.  இப்படியான காதலின் உரையாடல்களும் டப்மாஸில் தொடர்ந்தன.
“ஏய், விஷாலி யார்டி அந்த விமல்” இவளின் நண்பர்கள் வட்டாரம் அவளை நச்சரித்தன.
“தெரியாதே”
என்று தெரியாதா?
“ஆமா”
“அவர் என்னோட பேஸ்புக் பிரண்ட்’’
“ஒகோ முகம் தெரியாதே. ஒரு ஆளுகூட இவ்வளவு பேசுறியா? இது தப்பு இல்லையோ?
“இல்லையே என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் விஷாலி’’.
“டேய் விமல்”
“ம்”
“யார்டா அந்த விஷாலி”
விமலின் வட்டாரங்கள் அவனை விடாமல் விசாரித்தார்கள்.
தெரியாது ஆளு நேர்ல பாத்திருக்கியா?
இல்ல, அப்பெறம்?
“அவங்க என்னோட பேஸ்புக் பிரண்ட்
“ம்” மொகத்த பாக்காமலே ரெண்டு பேரும் டப்மாஸ்ல பாடுறீங்க. ஆடுறீங்க . காதல் வசனம் பேசுறீங்க. காமெடி பண்றீங்க இது தப்பில்லையா?
இல்லையே.
ஏண்டா
அவங்க யார்ன்னு தெரியலன்னாலும் அவங்க பேஸ்புக்ல என்னோட பிரண்டா தானே இருக்காங்க “
“அதுக்காக இப்பிடியா?
“இதெல்லாம் மாடர்ன் வேர்ல்டுடா . இப்ப இருக்கிற வசதிய நம்ம வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கிரனும் அதுல ஒண்ணு தான் இந்த டப்மாஸ் . அவங்களுக்கு பாடணும்; ஆடனும்னு பேசணும்னு ஆச. அத அவங்க என்கூட ஷேர் பண்ணிக்கிறாங்க அவ்வளவு தான் இதுல என்ன தப்பு தன் உரிமையை விடாமல்ச் சொன்னாள் விமல்.
அது தப்பில்ல விமல் ஒனக்கு கல்யாணம் ஆயிருச்சா?
“இல்ல”
“அந்த பொண்ணுக்கு”
“ம்.. கால்யாணம் ஆயிருச்சு”
“இப்படி கால்யாணம் ஆன பொண்ணு கூட நீ பாட்டுக்கு டப்மாஸ் அது இதுன்னு பண்ணிட்டு இருந்தய்னா அவங்க வீட்டுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டம்டா
“ம்ஹுகும்… இதெல்லாம் சாதாரணம்டா
படிச்சவங்கடா. இதெல்லாம் பெருசா நெனைக்காமாட்டாங்க .
இல்ல விமல். இத இப்படியே விட்டுரு. இல்ல பின்னால  பிரச்சன வரும்.
“டேய் டப்மாஸ்ல பேசுனா. பாடுனா பிரச்சினையா வரும். ஆமாடா அதில  நீ பேசுறது பாடுறத கல்யாணம் ஆன ஒரு பொண்ணுகூட .அத மொதல்ல நீ புரிஞ்சுக்கோ”
நண்பர்கள் எச்சரிக்கை செய்தனர். இருந்தும் விமலும் விஷாலியும் தொடர்ந்து டப்மாஸில் பாடியும் ஆடியும் பேசியும் வந்தனர் . அவர்களின் ஆட்டம் அடங்கவே இல்லை . இப்படித் தொடர்ந்த இவர்களின் இந்த ஆட்டம் கொஞ்சம் நாள் இல்லாமல் இருந்தது.
டேய் விமல் எங்கடா ஒன்னோட டப்மாஸ்ட்ரஸ் விஷாலி .
தெரியலையே என்ற பதிலைச் சொன்னான் விமல்.
“ம் … ஒனக்குத் தெரியாதுடா . ஏன்னா நீ பேஸ்புக்க மட்டும் தான் பாத்திட்டு இருக்க . நாங்க பேஸவே பாத்துட்டு இருக்கோம் . இவளோட புருசன் ஒம்மேல சந்தேசப்பட்டு அவள டைவர்ஸ் பண்ணிட்டானாம்.  நீ பண்ண  இந்த சின்ன விளையாட்டால ஒரு பொண்ணோட வாழ்க்கையே போச்சுடா”
ஏய் என்னடா சொல்றீங்க”
ஆமா
‘‘ச்சே… நான் சும்மா தாண்டா பண்ணுவேன்’’ வெலவெலத்தான் விமல்
இனிமேலாவது யார்கூடவும் பேசும் போது பாத்து பேசு
அது அவங்களுக்கு பிரச்சனையா கூட முடியும்.  நல்லவேள ஒம்மேல எந்த பிரச்சினையும் வரல .
நண்பர்களின் அறிவுரைகளை ஏற்ற விமல் இடத்திற்கே வருதில்லை.
இப்போதெல்லாம் டப்மாஸ் என்றால் விமல் தலைதெறிக்க ஓடினான்.