டிஎன் 01- ஏகியூ 8190

ஜெயச்சந்திரனுக்கு அன்று கையும் காலும் ஓடவே இல்லை
“ச்சே…. வண்டி இப்படி காணாமே போயிருச்சே…. மனுதுக்குள் புழுங்கிக் கொண்டே இருந்தார்.
விதியில விட்டுருந்து காணாப் போனா கூட பரவாயில்ல .பெரிய ஜவுளிக்கட பார்க்கிங்ல அதுவும் பத்து ரூவா பார்க்குக்கு அம்பது ரூவா வாங்குறான்
இவனுகள சும்மா விடக் கூடாது. மனதிற்குள் ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது.
‘‘விடுங்க போனது போச்சு. அதப்போயி, இவ்வளவு கவலைப்பட்டு என்ன பிரயோசனம். நம்ம நேரம்ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான் தலைக்கு வந்தது தலப்பாகையோட போனது மாதிரின்னு சொல்லுவாங்க. ஏதோ நம்மோட கெட்ட நேரம்னு நெனச்சுக்கிற வேண்டியது தான்’’ மனைவி நிர்மலா சமாதானப்படுத்தினாலும் ஜெயச்சந்திரனின் மனசு அடங்கவே இல்லை .
இல்ல நிர்மலா வண்டிய ஜவுளிக்கடையில விட்டுட்டு வெளிய போய்ட்டு வாரதுக்குள்ள எப்படி போச்சுன்னே தெரியல. எப்படி வண்டின்னு தெரியுமா. இதுவரைக்கும் இந்த வண்டி என்னைய எப்பவும் ஏமாத்தினது இல்ல .இந்த வண்டியில நம்ம சொந்த பந்தமே ஏறியிருக்காங்க. எத்தனையோ பெரிய பெரிய ஆக்சிடன்ட்ல இருந்தெல்லாம் என்னைய காப்பாத்தி விட்டுருக்குன்னு தெரியுமா? நம்ம வீட்டு சாப்பாடு அரிசிய இந்த வண்டி தான் கொண்டு வந்திருக்கு இதுவரைக்கும் நிர்மலா, வண்டியில பெட்ரோல் இல்லன்னு வந்ததே இல்ல ஒரு நாள் கூட இந்த வண்டி ஏமாத்துனது இல்ல நிர்மலா அதான் மனசு ரொம்ப கஷ்டமாயிருக்கு,
வண்டி கெடச்சிரும்னு சொல்றாங்கங்ல
சொல்றாங்க கெடைச்சாலும் நம்ம பழைய வண்டி மாதிரி வருமா? வண்டி காணாம போனதிலிருந்து மனசு ஒரு நெலையில இல்ல என்னமோ மாதிரி இருக்கு பெத்த புள்ளைய தொலைச்சமாதிரியிருக்கு இல்ல நிர்மலா கடைக்கு வந்த ரெண்டு பேரு கடைக்கு போறது மாதிரி போய்ட்டு அப்படியே வண்டிய எடுத்திட்டு போறானுக அப்படியே கேமராவுல பதிஞ்சிருக்கு கொஞ்சம் தளுதளுத்த குரலில் சொன்னார் ஜெயச்சந்திரன்.
என்னங்க விடுங்க இதுக்கு போயி மனசு கலங்கிட்டு இருக்கீங்க
இல்ல நிர்மலா இந்த வண்டிய வாங்க நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன்னு தெரியுமா?
தெனந்தோறும் பஸ் இடிவாங்கிட்டு போறத விட ஒரு வண்டி எடுக்கலாம்னு நெனச்சு பெரிய கஷ்டத்துக்கு நடுவுல தான் இத வாங்குனேன். இதோட ட்யூ கப்ட ரொம்ப கஷ்டப்படேன் . இந்த வண்டி வந்த பெறகு என்னோட எவ்வளவோ சொமைகள கொறச்சிருக்கு .வண்டி மேல ஏறிப் போனா அப்படியே காத்துல போற மாதிரி இருக்கும். அப்படியொரு ராசியான வண்டி இந்த வண்டி வந்த பெறகு தான் நம்ம வீட்டுக்கு நெறய பொருள்க வர
ஆரம்பிச்சுச்சு .இப்ப நம்மால காரு கூட வாங்க முடியும் .ஆனா இந்த வண்டி தான் எனக்கு பெருசுன்னு நெனச்சிட்டு இருக்கேன்.
அதெல்லாம் இருக்கட்டும். இப்ப வண்டி கெடச்சிரும்னு போலீஸ் சொல்லியிருக்காங்கள்ல.
சொல்லிருங்காங்க நம்ப முடியலியே காணப்போன எல்லா பொருள்களையும் கண்டுபுடிச்சு குடுத்தா நாட்டுல பிரச்சினையே இருக்காதே. கெடைக்கும்னு சொல்லிருக்காங்க .அது இல்ல நிர்மலா, இந்த மேருசுசரு இருக்கானே அவனுகள சொல்லணும் . இவனுக தான இதுக்கெல்லாம் பொறுப்பு
“ஆமா”
பார்க்கிங் பண்ற எடத்தில எந்த வண்டின்னு ஒங்களோடதுன்னு கேட்டா இந்த தப்பு வந்திருக்காதே .அவனுக பாட்டுக்கு காசு மட்டும் வந்தா போதும்னு சொல்லிட்டு யார் வந்து எடுத்திட்டு போனாலும் கேக்க மாட்டானுக
போல .
ஆனா ஒரு வார்த்தை சொன்னாங்க பைக் கெடைக்கலன்னா மேனேசரு வாங்கித்தருவாருன்னு யாரு வாங்கிக் குடுத்தா என்ன? நம்ம வண்டி மாதிரி வருமா? போச்சு புலம்பினார் ஜெயச்சந்திரன் .நிர்மலாவால் அவருக்கு சமாதானம் செய்யவே முடியவில்லை.
இன்னைக்கு போலீஸ் ஸ்டேசன்ல வரச் சொல்லிருக்காங்கள்ல
“ஆமா”
“போய்ட்டு வாங்க”
“ம்” புறப்பட்டார் ஜெயசந்திரன் .சிறிது நேரத்தில் போலீஸ்ஸ்டேசனை அடைந்தார்.
வாங்க ஒங்களோட பைக்தான காணாம போச்சுன்னு கம்ப்ளைண்ட் குடுத்தீங்க கான்ஸ்டபிலள் கேட்டார்.
“ஆமா சார்”
திருடனக் கண்டு புடிக்க முடியலீங்க” எல்லா ஸ்டேசனக்கும் இன்பார்ம் பண்ணிட்டோம் .கண்டிப்பா புடிச்சிருவாங்க.
எப்ப சார். என்னால வண்டி இல்லாம ஆபிஸ் மாயருக்கு நீங்க சொல்றது புரியது சார் திருடறவன் எங்கள கேட்டுட்டா திருட்டு போன அவ்வளவுமதான் விடுங்க கூலாகிப்பதில் சோன்னார் போலீஸ்காரர் எதுவும் பேசாமல் ஸ்டேசனை விட்டு வெ ளியேறினார் ஜெயசந்திரன்.
இரண்டொரு நாளில் போலீஸ் ஸ்டேசனிலிருந்து அழைப்பு வந்தது.
ஜெயசந்திரன் இங்க வாங்க . ஒங்க வண்டிய கண்டு பிடிக்க முடியல. இந்தாங்க மேனேசரு வேறவண்டி குடுத்து விட்டுருக்காரு .எடுத்திட்டு போங்க என்று வேறொரு வண்டியைக் காட்டினார் பேலீஸ்காரர்
அந்த வண்டியைப் பார்த்தார் காணாமல்கேபான வண்டியை விட அது புதுசாக இருந்தாலும் அது தன் பழைய வண்டியைப் போல் வரவில்லை . அந்த வண்டியை வேணஙடாம் என்று சொல்லி விட்டு
வெளியேறினார் .
நினைவெல்லாம் அந்தப் பழைய வண்டியிலேயே நின்று கொண்டிருந்தது.

ராஜா செல்லமுத்து