திருப்பரங்குன்றத்தில் அண்ணா தி.மு.க.வி 46–வது ஆண்டு விழா;

திருப்பரங்குன்றம்,அக்.17–
அண்ணா தி.மு.க.வின் 46–வது ஆண்டு விழாவையொட்டி மதுரை புறநகர் மாவட்ட அண்ணா தி.மு.க சார்பில் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.ஏல்.ஏ., கழக கொடியினை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
எம்.ஜி.ஆர். கடந்த 1972–ம் ஆண்டு அக்டோபர் 17–ந் தேதி அனைத்திந்திய அண்ணா தி.மு.க என்ற இயக்கத்தை உருவாக்கினார். இன்றைக்கு இந்த இயக்கம் 1 1/2 கோடி தொண்டர்களை கொண்டு நாட்டின் 3–வது பெரிய இயக்கமாக திகழ்ந்து வருகிறது. அண்ணா தி.மு.க இயக்கத்தின் 46–வது ஆண்டு விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மதுரை புறநகர் மாவட்ட அண்ணா தி.மு.க சார்பில் மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கழக கொடிகளை ஏற்றி இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா,எம்.ஏல்.ஏ., திருப்பரங்குன்றத்தில் கழக கொடியினை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், நீதிபதி, பெரியபுள்ளான் (எ) செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், மாவட்ட முன்னாள் ஊராட்சிக்குழு தலைவர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், நிர்வாகிகள் எஸ்.என்.ராஜேந்திரன், அய்யப்பன், அம்பலம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், முன்னாள் சுகாதாரக்குழு தலைவர் முனியாண்டி உட்பட ஏராளமான அண்ணா தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.