அண்ணா தி.மு.க. 46–வது ஆண்டு துவக்கவிழா

சென்னை, அக்.17–
அண்ணா தி.மு.க.வின் 46வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
அண்ணா தி.மு.க.வின் 46வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு இன்று காலை, ஒருங்கிணைப்பாளரும், பொருளாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், தலைமை நிலையச் செயலாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் ஓங்குக என்று திரண்டிருந்த தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.
1972–ம் ஆண்டு அக்டோபர் 17–ந் தேதி முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க. கழகத்தை துவக்கினார். இன்று அண்ணா தி.மு.க.  46–வது ஆண்டு துவக்க நாள்
ஆகும்.
இதனையொட்டி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும் கழக கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆர். சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மதுசூதனன்
துவக்க விழா நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், முன்னாள் வக்ப் வாரிய தலைவருமான அ.தமிழ்மகன் உசேன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத், காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், பென்ஜமின், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம் எம்.பி., நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, பி.வி.ரமணா, செம்மலை எம்.எல்.ஏ., முன்னாள் அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், வைகை செல்வன், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, விருகை ரவி, சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ., சிட்லபாக்கம் ராஜேந்திரன், வாலாஜாபாத் கணேசன், அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் பி.சத்தியா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜே.சி.டி. பிரபாகர், கே.பி.கந்தன், கே.குப்பன், கு.சீனிவாசன், நடிகர் ஜெயகோவிந்தன், செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயன், பரிமேலகன், வடசென்னை மாவட்ட பேரவை செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், எம்.பி.க்கள் ஜெயவர்த்தன், டி.ஜி. வெங்கடேஷ்பாபு, டாக்டர் வேணுகோபால், மற்றும்  மயிலை பகுதி செயலாளர் டி.ஜெயச்சந்திரன், டி.சிவராஜ்,  டியுசிஎஸ். சீனிவாசன், லிபர்டி ராஜூ,  இ.எஸ். சதீஷ்பாபு, பாக்சர் தங்கம், பத்மா, எம்.டி.சி.ரவி, கே.எஸ். அஸ்லாம், பிரபாகரன், புஷ்பாநகர் ஆறுமுகம், லயன் வீராசாமி, தி.நகர் சாமிநாதன், த.கோவிந்தன், ஜெ.விஜயபாஸ்கர், சைதை என்.எஸ். மோகன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜூனன், மாவட்ட பேரவை இணை செயலாளர் எம்.இஸ்மாயில்கனி, சொ.கடும்பாடி, வில்லிவாக்கம் மகேஷ், வேளாங்கண்ணி, அஞ்சு லட்சுமி,  மயிலை ராஜேஷ் கண்ணா,  உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.