லட்சுமி விலாஸ் வங்கி சிறப்பான செயல்பாடு:

சென்னை, அக். 12–
லட்சுமி விலாஸ் வங்கி சிறந்த நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது. இதன் டெபாசிட் மற்றும் வழங்கிய கடன் அதிகரித்துள்ளது. கடன் வசூலை தீவிரப்படுத்தி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கணக்குகளின் தொகை ரூ.2,200 கோடியிலிருந்து 1,700 கோடியாக குறைந்துள்ளது. பிரச்சினை இல்லாத சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் கூடுதலாக வழங்குகிறது என்று நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பி.முகர்ஜி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:–
தனியார் துறை வங்கியில் தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தரும் வங்கி, எங்கள் வங்கி. முழுவதும் டிஜிட்டல் மையமான இந்த வங்கியில் மொத்த டெபாசிட் செப்டம்பர் மாதம் 30ந்தேதியுடன் முடிவடைந்த காலத்தில் ரூ. 29 ஆயிரத்து 171 கோடியாகி 9.34 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறைந்த வட்டிக்கு பெறப்படும் டெபாசிட்கள் இதில் 32.45 சதவீதமாகி ரூ. 1,498 கோடியாகியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட இரட்டிப்பாகி உள்ளது.
இந்த வங்கி வழங்கிய மொத்த கடன் முந்தைய காலத்தை விட 14.63 சதவீதமாக அதிகமாகி, அதாவது ரூ. 23 ஆயிரத்து 215 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வங்கியில் உள்ள கணக்குகளில் செயல்பாடுகள் குறைந்ததால், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கணக்குகள் தொகை ரூ. 2 ஆயிரத்து 200 கோடியாக கண்டறிந்து இந்த நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட ஊக்கம் மற்றும் இதன் செயல்பாடுகளை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நடவடிக்கையால் தற்போது இதன் அளவு ரூ. 1 ஆயிரத்து 700 கோடி ஆக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வங்கியில் மொத்தம் 511 கிளைகள், 7 விரிவாக்க கிளைகள், 983 ஏடிஎம்கள் என 17 மாநிலங்களில் உள்ளன. இந்த வங்கியில் பல்வேறு நவீன டெபாசிட் வசதிகள், கடன் திட்டங்கள், அறிமுகப்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்களால் பாராட்டப்பட்டது. இந்த வங்கி பிரச்சினை இல்லாத சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பல்வேறு கடன் வசதிகளை வழங்கி ஒட்டுமொத்த வங்கி சேவையையும் வழங்கி வருகிறது.
இது ஆன்லைன் பண பரிவர்த்தனை, செல்போன் பண பரிவர்த்தனை போன்ற நவீன வங்கி வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு உலக தர சேவை வழங்க சென்னை, பெங்களூரில் புதியதாக தனிநபர் கடன் வழங்கும் கிளைகளை துவக்கி உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வங்கியாக இருந்தாலும், தேசிய அளவில் செயல்படுகிறது. இது பல்வேறு புதுமை நடவடிக்கைகளை எடுத்து நிர்வாக சீரமைப்பு செய்துள்ளது. இது வணிகத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் பி.முகர்ஜி தெரிவித்தார்.
காலதாமதத்தை
நிர்வகிக்க…
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போது கடன் வழங்கிய பிறகு கடன் நிர்வாகம், கடனை கண்காணித்தல் போன்ற பணிகளையும், சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் கடன் வழங்கி கண்காணிக்கும் பணிகள் அந்தந்த கிளைகளில் நடைபெற்றது. கால தாமத்தை தவிர்க்கவும் திறமையாக நிர்வாகிக்கவும், கடன் நிர்வாகம் தனியாக செயல்படுத்தப்படுத்த இந்த வங்கி கமர்ஷியல் வங்கி கிளையை துவக்குகிறது.
இந்த சிறப்பு கடன் கிளைகள் நாடு முழுவதும் இதன் கிளைகளில் வழங்கப்படும் கடன்களை இந்த கமர்ஷியல் பொறுப்பேற்று நிர்வகிக்கும்.
கார்ப்பரேட் சிறுதொழில் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய கடன்களை நிர்வகித்தல், பணத்தை வசூல் செய்தல் போன்ற பணிகளை இக்கிளை மேற்கொள்ளும். இதற்காக பயிற்சி பெற்ற ஊழியர்கள், நவீன கம்ப்யூட்டர்கள், தகவல் மையம் போன்றவை மூலம் நிர்வகிக்கிறது.
இதற்காக சென்னை மற்றும் பெங்களூரில் மையம் நிறுவி இதன் அனைத்து கிளைகளிலும் வழங்கப்படும் கார், வீடு மற்றும் தனி நபர் கடன் விண்ணப்பங்களை ஆன்லைனிலேயே பரிசீலனை செய்து உடன் அனுமதி வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.