ராயல் கேர் மருத்துவமனையில் சிறப்பு கண் பரிசோதனை

உலக கண் பார்வை தினத்தையொட்டி, ராயல் கேர் மருத்துவமனையில், சிறப்பு கண் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான கே.மாதேஸ்வரன் கூறும் பொழுது, கோவை நீலம்பூரில் இயங்கி வரும், ராயல் கேர் சிறப்பு மருத்துவமனையில், உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு, சிறப்பு கண் பரிசோதனை முகாம், 13ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

இந்த சிறப்பு கண் மருத்துவ பரிசோதனையில், கண் பார்வை குறைபாடுகளான தூரப்பார்வை, கிட்டப்பார்வை, சமசீரற்ற பார்வை, வெள்ளெழுத்து பரிசோதனை, கண் புரை பரிசோதனை, குளுக்கோமா என்னும் கண் நீர் அழுத்தனாய் பரிசோதனை, சர்க்கரை நோயாளிகளுக்கு கண் விழித்திரை பரிசோதனை, ரத்த அழுத்த நோயாளிகளுக்கு, கண் விழித்திரை பரிசோதனை, முதுமையினால் விழித்திரையில் ஏற்படும் பாத்திற்கான பரிசோதனை, உலர்ந்த கண் பரிசோதனைகளை, சிறப்பு கண் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி அளிப்பார். முன் பதிவு மற்றும் விபரங்களுக்கு 0422 -– 2227106 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று கூறினார்.