திண்டுக்கல் அரவிந்த் கண்மருத்துவ மனையின் 7வது ஆண்டுவிழா:

திண்டுக்கல், அக்.12–
திண்டுக்கல் அரவிந்த் கண்மருத்துவமனையின் 7வது ஆண்டுவிழா மற்றும் விருது வழங்கும் விழாவில் திண்டுக்கல் இராமகிருஷ்ணா ஆசிரமத்தை சேர்ந்த சுவாமி நித்ய சத்வானந்தா கலந்துகொண்டு சிறப்பித்தார். திண்டுக்கல் அரவிந்த் கண்மருத்துவமனை 7 வருடங்களில் 76ஆயிரத்து 212 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அரவிந்த் கண் மருத்துவமனை 4ஆயிரத்து 118 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.
திண்டுக்கல்லில் உள்ள அரவிந்த் கண மருத்துவமனை தனது 7வது ஆண்டுவிழாவை வெகு சிறப்பாக கொண்டாடியது. பழனி சாலையில் உள்ள என்.பி.நாதன் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது விழாவிற்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை கண் மருத்துவர் டாக்டர் என்.வெங்கடேஷ் பிரஜ்னா தலைமை தாங்கினார். இறைவணக்க பாடலை திண்டுக்கல் அரவிந்த் கண்மருத்துவமனை மேலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் பாடினார். டாக்டர் சதீஸ் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திண்டுக்கல் இராமகிருஷ்ணா ஆசிரமத்தை .ேசேர்ந்த சுவாமி நித்யசத்வானந்தா பேசுகையில் ஏழை மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் உலகத்தை அவர்கள் காண்கின்ற உன்னத சேவையை அரவிந்த் கண் மருத்துவமனை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. ஒரு மனிதனால் அவன் உடலில் எந்த உறுப்புகளை இழந்தாலும் சமாளிக்க முடியும் ஆனால் கண் பார்வை இழந்துவிட்டால் அடுத்தவர் உதவி இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது. கண் பார்வையில் உள்ள குறைகளை ஏழை எளிய மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் செய்யும் அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தை மனதார பாராட்டுகிறேன் என்றார். திண்டுக்கல் அரவிந்த் கண்மருத்தவமனை கடந்த 7வருடங்களில் 76ஆயிரத்து 212 வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தும் 4ஆயிரத்து 118 நோயாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்தும் சாதனை படைத்ததை மனதார பாராட்டுகிறேன் என்றார்.
விழாவில் சிறப்பாக பணியாற்றிய கண் மருத்துவர்கள் தீபக், கே.ஆர்.சுமதி, எம்.இளையரசி ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் திண்டுக்கல் அரவிந்த் கண் மருத்துவமனை செவிலியர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக டாக்டர்.சுவாதிஜா நன்றி கூறினார்.