லைப் செல் தொப்புள் கொடி வங்கியில் கிரையோ – சேப் நிறுவனத்தின் 18 ஆயிரம் தாய்மார்களின் ஸ்டெம்செல் இணைப்பு

சென்னை, அக். 11–
சென்னை மற்றும் டெல்லி அருகே குருகானில் தொப்புள் கொடி சேமிப்பு மையத்தை லைப் செல் நிறுவி, இதில் ஆண்டுக்கு 50 ஆயிரம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் தொப்புள் கொடியை சேமித்து வைத்துள்ளனர். மொத்தம் 2.70 லட்சம் பெற்றோர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிறுவனத்துடன், இந்தியாவின் முதல் தொப்புள் கொடி சேமிப்பு நிறுவனமான கிரையோ–சேவ் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் 18 ஆயிரம் பெற்றோர்களின் தொப்புள் கொடி பாதுகாப்பை லைப் செல் மேற்கொள்ளும் என்று நிர்வாக இயக்குனர் மயூர் அபையா தெரிவித்தார்.
லைப்செல் அமெரிக்கா, முன்னணி நகருக்கு இணையாக தொப்புள் கொடி சேமிப்பில் முன்னணியில் உள்ளது. 2004ம் ஆண்டில் துவங்கி, தற்போது 200 நகரங்களில் கிளைகள் கொண்டு உலகின் மிகப்பெரிய 2வது நிறுவனமாக லைப்செல் திகழ்கிறது.
இதன் ‘பேபி தொப்புள்கொடி ஷேர்’ திட்டத்தில், உலகளவில் முதன்முறையாக இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் ஸ்டெம் செல் பெற உதவுகிறது. பேபி ஷீல்ட் திட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மரபணு பரிசோதனை செய்து நோய் பாதிப்பு ஏற்படுவதை கண்டறிந்து தெரிவிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கிரையோ சேவ் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் ரோடரிக் ஸ்டார்ட் பேசுகையில், எங்களிடம் 18 ஆயிரம் தொப்புள் கொடி சேமிப்பு உள்ளது. லைப்செல் இவர்களுக்கு கூடுதுலாக சேவை புரிய இவை லைப் செல்லுக்கு மாற்றப்படுகிறது என்றார்.
தொப்புள் கொடி சேமிப்பதால் அக்குழந்தையின் குடும்பத்தினருக்கு கொடிய நோய் வந்தால், இதன் மூலம் உயிர் காக்க முடியும். கிரையோ–ஷேவ் நிறுவன 18 ஆயிரம் பெற்றோர்கள் கூடுதல் வசதி பெற, லைப் செல்லில் தங்கள் திட்டத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த சேமிப்பு, குழந்தையின் ஆயுளுக்கும் சேமிக்க முடியும் என்றார். இது உலகின் மிகப்பெரிய 2வது தொப்புள் கொடி வங்கியாக திகழ்கிறது என்றார்.