போர் விமானங்களை அனுப்பி வடகொரியாவை எச்சரித்த அமெரிக்கா

சியோல்,அக்.11–
கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டத்தை  உருவாக்கும் வகையில் ஆயுத பலத்தை காட்டி வரும் வடகொரியாவை எச்சரிக்கும்  வகையில், அமெரிக்கா தனது போர் விமானத்தை அனுப்பி ஒத்திகை பார்த்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த  பொருளாதார தடைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு  வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அமெரிக்க போர் விமானங்கள் கொரிய தீபகற்ப பகுதியில்  வட்டமடித்து வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளன. குவாம் தளத்திலிருந்து  அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் ஜப்பான் மற்றும் தென்கொரிய வான்பகுதியில்  பறந்தன. தென் கொரியாவில் சென்றபோது அவற்றுடன் தென்கொரியாவின் 2 போர்  விமானங்களும் சென்றன. இதேபோல் ஜப்பான் பகுதியில் அமெரிக்க விமானங்கள்  பயிற்சியில் ஈடுபட்டபோது ஜப்பான் நாட்டின் போர் விமானங்களும் இணைந்துகொண்டன.