தீபாவளிக்கு 20 புதுமை டிசைன்கள்; 25% சலுகை விலையில் மைசூர் சில்க் சேலைகள்

சென்னை, அக். 10–
மைசூர் சில்க் சேலைகள் என்றால் மகளிருக்கு விருப்பம். தீபாவளிக்கு கர்நாடக அரசின் கர்நாடகா சில்க் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் சார்பில் பாரம்பரிய மைசூர் சில்க் சேலைகள் புதிய டிசைன் அறிமுகம், விற்பனை கண்காட்சியை ஆழ்வார்பேட்டை சங்கரா ஹாலில் நடிகை பேபி இந்திரா திறந்து வைத்தார். இது 12ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் தீபாவளி விற்பனை சலுகையாக 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது. கிரேப் சில்க், ஜார்ஜெட் பிரிண்ட் சேலைகள், சில்க் டாப், ஸ்கர்ட், டை போன்றவைக்கும் 25% தள்ளுபடி கிடைக்கும். தீபாவளிக்கு புதியதாக 20 டிசைன்களில் மைசூர் சில்க் சேலைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று மார்க்கெட்டிங் மேலாளர் பானுபிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை கிளை மேலாளர் மற்றும் கண்காட்சி பொறுப்பாளர் ரகுராம் வரவேற்றார்.
இந்தியாவில் இதர பட்டுசேலைகளை விட மைசூர் சில்க் வித்யாசமாக உள்ளது. இதன் இயற்கை பட்டு இழைகள் வண்ணத்துப்பூச்சியின் புழு கூட்டிலிருந்து பெறப்படுகிறது. இதனால் பட்டுசேலை மிருதுவாக, கூடுதல் பளபளப்புடன் மைசூர் பகுதியில் மட்டும் கிடைக்கிறது.
மைசூர் சில்க் நூலிழைகள் முறுக்கப்பட்டு, பட்டுசேலைக்கு எடுப்பான தோற்றம் வழங்குகிறது. இந்த பட்டுசேலையில் ஜரிகையில் தங்கம் 0.65% மற்றும் வெள்ளி 65% அளவு உள்ளதால் சுத்தமான ஜரிகையாக உள்ளது.
இதன் மைசூர் தொழிற்சாலையில் கம்ப்யூட்டர் டிசைன் நெசவு வசதி உள்ளதால், புதியதாக 20 டிசைன் அறிமுகம் செய்துள்ளது.
இந்த மைசூர் சில்க் பெயர் பார்லிமெண்டில் அங்கீகாரம் பெற்றுள்ளது. உலகத்தர ஐ.எஸ்.ஓ தர விருது கிடைத்துள்ளது. இதன் தொழிற்சாலை 105 ஆண்டு பாரம்பரியம் பெற்றதாகும். இதன் மார்க்கெட்டிங் திறமைக்கு முதல்வரின் ரத்னா விருது கிடைத்துள்ளது.
சென்னையில் இதன் கிளை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் தி.நகர் கிளப் எதிரில் உள்ளது. இது பற்றிய அறிய ஆன்லைனில் www.ksicsilk.com வலைதளத்தைப் பார்க்கலாம்.