உடல் – சரும பராமரிப்புக்கு புதிய பாடி லோஷன்:

மதுரை, அக்.10–
நாட்டின் மிகப்பெரிய நேரடி விற்பனை  நிறுவனமான ஆம்வே இந்தியா புரூர் பிராண்டின் கீழ்  சீரமைக்கப்பட்ட உடல் பராமரிப்பு கலெக்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த குடும்பத்திற்குமென வடிவமைக்கப்பட்டிருக்கும் இருபாலர் உடல் பராமரிப்பு ரகத்தில்  சருமத்திற்கு இரட்டை பராமரிப்பு வழங்கும் வகையில்  புரூர் நரிஷ் பாடிலோஷன் மற்றும் புரூர் ரிஃப்ரெஷ் பாடிவாஷ் ஜெல் உள்ளடங்கியுள்ளது. 250அட கொண்ட ஒவ்வொன்றின் விலை ரூ.440 ஆகும். இரண்டு புராடக்ட்களும் சரும மருத்துவ பரிசோதனை மற்றும் ஒவ்வாமை பரிசோதனை செய்யப்பட்டவை. விட்டமின்கள் மற்றும் இயற்கையாகவே தாவர சேர்க்கைப் பொருட்கள் செறிவுட்டப்பட்டதுமான இந்த உடல் பராமரிப்புப் பொருட்கள், சுற்றுச்சூழல் உணர்வுமிக்க வடிவமைப்பு மற்றும் இனிமையான நறுமணத்துடன் கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் வெளிவந்திருக்கின்றன.
புரூர் என்பது உலகளவில் உடல் பராமரிப்பு பிரிவில் முத்திரை பதித்த பிராண்டுகளில் ஒன்றாகும். வேகமாக மாறிவரும் நுகர்வோர்களின் தேவையை நிறைவேற்றுவதில் முந்தியிருப்பதற்கு மற்றும் சந்தையில் போட்டித்திறனுடன் இருப்பதற்கு எங்களுடைய உலக பிராண்டை மேம்பட்ட உருவாக்கம் மற்றும் பேக்கேஜிங்குடன் புத்துணர்வுட்டியிருக்கிறோம். எங்களுடைய சீரமைக்கப்பட்ட புரூர் உடல் பராமரிப்பு பொருட்களைக் கொண்டு சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு பங்கை நாங்கள் கைப்பற்றுவோம் என்பது உறுதி. நரிஷ் பாடி லோஷன் புத்துணர்வுட்டும் நறுமணத்துடன் 24 மணி நேரமும் ஈரப்பத உருவாக்கத்தை வழங்குகிறது மற்றும் புரூர் ரிஃப்ரெஷ் பாடிவாஷ் இந்திய குடும்பத்திற்கு உகந்த சல்பேட் மற்றும் சோப்பில்லாத ஃபார்முலாவுடன் வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் உடல்பராமரிப்பு சந்தையானது ரூ.1000 கோடி என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது மற்றும் இது 2021 முடிவில் ஏறக்குறைய ரூ.1900 கோடி என்றளவுக்கு இரண்டு மடங்கு ஆகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 3 பிராண்டுகளில் ஒன்றாக ஆகும் அளவிற்கு புரூர் பிராண்டு உயரக்கூடும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று ஆம்வே இந்தியா, பியுட்டி பர்சனல் கேர் பிரிவு தலைவர் ஆள. அனிஷா சர்மா கூறினார்.