போலி இன்சூரன்ஸ்

சார், 8 ம் நம்பர்ல இருக்கிற வாசுதேவனுக்கு ரொம்ப முடியல ஒடனே ஆபரேசன் பண்ணனும் சார்
அப்பிடியா? ஒடனே ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணுங்க துரித கதியில் சொன்னார் மருத்துவர்.
அறையிலிருந்து ஆபரேசன் தியேட்டருக்கு மாற்றப்பட்டார் வாசுதேவன்
படபடவெனப் பறந்தன மருத்துவக் குறிப்புகள். மயக்கமருந்து செலுத்தப்பட்ட வாசுதேவன் ஆபரேனுக்கு உட்படுத்தப்பட்டார்.
‘‘என்ன ஆபரேசன்?’’– ஆபரேசன் தியேட்டரில் நுழைந்ததும் கேட்டார் இன்னொரு மருத்துவர்
ஒங்களுக்கு என்ன பிடிக்குமோ அதப் பண்ணி விடுங்க. என்ன சொல்றீங்க?
ஆமா சார் சின்னதா ஏதாவது கத்தி போடுங்க. பெருசா நாம எதையாவது சோடிச்சுக்கலாம்
ம் … மூலம்
வேணாங்க. அது ரொம்பக் கஷ்டம்
அப்பண்டிஸ்
அதுவும் வேணாம்
வேற என்ன பண்ணலாம்?
வாசு தேவனை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து ஆபரேசன் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இதயத்துக்கு கீழ் சின்னதா ஒரு கீறல் போடுங்க . தய ஆபரேசன்னு சொல்லிரலாம்.
ஓகே என சொன்ன டாக்டர் இடது கையில் ட்ரை புரூட்ஸைக் கொறித்த படியே வாசுதேவனின் இதயத்துக்கு கீழே சின்னதாய் ஒரு கீறல் போட்டார்.
ஓ.கேவா?
சூப்பர்,
ஆளத்தூக்குங்க
அப்புறம்?
இன்னும் ரெண்டு மூணு பேஸண்ட் இருக்காங்க அங்க போகலாமா?
போகலாமே என டாக்டர்கள் நர்ஸ்கள் புடைசூடி ஆபரேசனுக்குக் காத்திருந்தவர்களை நோக்கிப் பயணப்பட்டார்கள் மருத்துவர்கள்.
ஏய் சுஜி இன்னைக்கு நீ ரொம்ப அழகாயிருக்க?
போங்க டாக்டர் தெனமும் நீங்க இதையே தான் சொல்றீங்க.
இல்ல சுஜி நீ இன்னைக்கு நீ உண்மையிலயே அழகு
சுஜி வௌ்ளை உடையில் இருந்தாலும் ரத்தச் சிவப்பாய் வெக்கப்பட்டாள்.
இன்னொரு டாக்டர் நர்ஸின் தோள் தொட்டுக் கொண்டே சென்றார்.
என்னங்க எந்தரூம் பதினெட்டு இருபது
ஓ…. அங்க தான் பேஸண்ட் இருக்காங்களா?
ஆமா சார்… என இன்னொரு மருத்துவர் சொல்ல ட்ரை புரூட்ஸைக் கொறித்தபடியும் வௌ்ளை நர்ஸ்களின் கன்னங்களைத் தடவிய படியுமே சென்றனர். டாக்டர்கள் மயக்க நிலையில் மல்லாந்து படுத்துக் கிடந்தனர் நோயாளிகள் என்ன சார் இவங்களுக்குத்தான் ஆபரேசனா?
ஆமா சார்.
என்ன ஆபரேசன் பண்ணலாம்.
நீங்களே பாத்து முடிவு பண்ணுங்க என்றபடியே வந்தார் ராம்குமார்.
அவர் அந்தப் பிரதான தனியார் மருத்துவமனையின் முதலாளி.
ராம்குமாரைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிட்டனர் டாக்டர்கள்.
ராம்குமார் சார் எப்படி இருக்கீங்க?
இருக்கோம் சார் ஒங்கள மாதிரி டாக்டர்கள் இல்லன்னா நாங்கெல்லாம் எப்படிப் பொழைக்கிறது. எல்லாம் ஒங்களோட ஆசிர்வாதம் என்றான் ராம்குமார்.
டாக்டர் தொழிலுக்குப் படிச்சிருந்தாலும் வேலையும் சம்பளமும் நீங்க தான தாரீங்க மகராசன் பணத்துக்கு முன்னாடி எம்பிபிஎஸ் எல்லாம் சும்மாங்க என்றார் ஒரு மருத்துவர்
எல்லலாம் முடிஞ்சதுங்களோ?
இப்பமுடியப் போகுது சார்
சீக்கிரம் முடிங்க கட்டளையிட்டுச் சென்றான் ராம்குமார்.
இன்னும் ஐந்து பேருக்கு அறுவைச் சிகிச்சை போல சில கீறல்களை முடித்து விட்டு வௌியேறினார். மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் பெரிய பெரிய தோரணைகளை உருவாக்கி ஆட்களை மருத்துவமனை முழுவதும் நிரப்பி வைத்தனர்.
ராம்குமார் அன்று பெரிய சந்தோசத்தில் இருந்தான்.
டாக்டர்களை உச்சி மோந்து பாராட்டினான்.
ஏற்கனவே ஆபரேசன் பண்ணுனவங்க இருக்கிறாங்க. சார் பட்டுவாடாவ முடிச்சிருங்க.
ஓ.கே. சார்
இப்ப ஆபரேசன் பண்ணுனவங்கள எப்ப அனுப்பலாம்?
ஒருவாரம் ரெஸ்ட் எடுத்திட்டுப் அனுப்பிடுங்க. அப்பத்தான் ஒர நம்பகத்தன்மை வரும்.
அதுவும் சரி என ராம்குமார் பெரிதாகத் தலையாட்டினான்.
அப்போது பணம் கட்டும் கவுண்டரில் நோயாளிகளுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
சார் எனக்கு அம்பதாயிரம் தாரேன்னு சொன்னாங்களே.
யாரு
ஏஜெண்ட்
நீங்க இதுவரைக்கும் எவ்வளவு இன்சூரன்ஸ் கட்டியிருக்கீங்க?
அஞ்சாயிரம் ரூவா?’
அஞ்சாயிரத்துக்கு அம்பதாயிரம் பத்தாதா?
இது ரொம்ப அநியாயம்ங்க
எது அநியாயம். நீ சும்மா மெடிகிளைம்னு ஒண்ண போட்டுட்டு ஒனக்கு ஆபரேசன் பண்ணுன மாதிரி நாங்க சோடனை பண்ணி அந்தப் பணத்தை வாங்குறதுக்குள்ள கண்ணு முழி ரெண்டும் பிதுங்கி வௌியே வந்திருது.
பேசாம குடுக்கிறத வாங்கிட்டுப் போய்யா என மெடிகிளைம் போட்டு போலியாக ஆபரேசன் செய்த நோயாளியைத் திட்டி அனுப்பினான் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவர். இந்தாங்க என இன்னொரு மெடிக்கிளைம் போட்ட நோயாளிக்கு பணத்தை எண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
சார்…  சொல்லுங்க
என்னோட பொண்ணுக்கு மெடிக்களைம் இன்சூரன்ஸ் போட்டிருக்கேன் என்றான் அங்கே இருந்த ஒரு அப்பாவி
எவ்வளவு நோய்க்குப் போட்டுருக்கீங்க. அக்கறையாய் விசாரித்தான் ஒரு மருத்துவன். இருபது லட்ச ரூபாய்க்கு அப்படியா?
ஒங்க பொண்ண நாளைக்கு கூட்டிட்டு வாங்க ஆபரேசன் பண்ண ஏற்பாடு பண்ணலாம் . இந்தாங்க பத்தாயிரம் ரூபா அட்வான்ஸ் வச்சுக்கங்க என்று அந்த அப்பாவியின் கையில் பணத்தைத் திணத்தான் ஒரு மருத்துவன்.
இன்னொரு போலி ஆபரேசனுக்காக ஆபரேசன் தியேட்டருக்குள் நுழைந்தனர் மருத்துவர்கள்
அன்று வந்த கோடிக்கணக்கான மெடிக்கல் இன்சூரன்சுக்காக செக்குகளைச் சரி பார்த்துக் கொண்டிருந்தான் ராம்குமார்.

ராஜா செல்லமுத்து