நம்பிக்கை

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி வீட்டைச் சுத்தம் செய் வேண்டுமென்று நினைத்தான் ராஜேஷ்.
ஆனால் அவனால் முயைவே இல்லை. வீடு முழுவதும் புத்தகங்களும் பேப்பர்களமும் நிறைந்து கிடந்தன.
யப்பா இத எடுத்துப் போட்டமுன்னா அம்புட்டுத்தான். ரெண்டு நாள் ஆகும். இதுல நமக்கு சைனஸ் பிரச்சினை
வேற . தூசி போச்சுன்னா அம்புட்டுத்தான் .
இப்படியே வருடங்கள் பல கடந்தன
தூசி மூக்கில ஏறுச்சு அம்புட்டுத்தான் .பேசாம இத எடுக்காம இருக்கிறது மேல் என்ற படியே இருந்த ராஜேஷின் செல்போன் அன்று சிணுங்கியது.
“ஹலோ சொல்லுங்கண்ணே என்றான் ராஜேஷ்
ராஜேஷ் ஒங்க வீட்டுக்கு வந்தேன் .வீடு நல்ல வீடு. ஆனா வச்சிருக்கிற மொற சரியில்ல என்றூ பூடகம் போட்டான் நீலன்.
ஏன்? என்னாச்சு?
இல்ல ராஜேஷ் .ஒங்க வீட்டுல எடம் அதிகமா இருக்கு .பொருள் வச்சிருக்கிற மொற சரியில்ல
ஓ ….. என்ன செய்யலாம்.?
நாள் ஊருக்குப் போறேன்
அப்பிடியா ?
என்கிட்ட ஸ்டவ் இருக்கு. கேஸ் சிலிண்டர் இருக்கு. நீங்க யூஸ் பண்ணிக்கலாம்.
எனக்கு கேஸ் ஸ்டவ்ல எதுவும் தெரியாதே.
நான் சொல்லித் தாரேன்
வேணாம்
கேஸ் ரொம்ப ஸ்ம்பிள்ங்க.
என்ன ரெகுலேட்டர் மட்டும் கொஞ்சம் பிரச்சின.
வாங்கிருவோம் என்றான் நீலம்.
சொன்னபடியே மறுநாள் வீட்டிற்கு வந்தான்.
ம்… ஒங்க வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றபடியே படபடவென மேலே செல்பில் இருந்த பொருட்களை அள்ளிக் கீழே போட்டான்.
நீலம் எனக்கு லேசா தலை வலிக்கிறது மாதிரி இருக்கு. அதோட எனக்கு டஸ்ட்னாலே ஆகாது. சைனஸ் பிராப்ளம் வேற. நீங்க முடிச்சிட்டுக் கூப்பிடுங்க என்றபடியே ராஜேஷ் லேசுாக கண்ணயர்ந்தான்.
என்ன ஏதென்று கேட்காமலே எல்லா பிளாஸ்டிக்கையும் அள்ளிக் கீழே போட்டான்.
என்ன சத்தம் ஒரு மாதிரியா இருக்கு என்று ராஜேஷ் உள்ளே ஓடினான்.
என்ன நீலம் இப்படி?
எல்லா பிளாஸ்டிக்கையும் பிச்சுப் போட்டுட்டேன் .ஒரு மாதிரியாகச் சிரித்தான்.
இதெல்லாம் என்னென்னு தெரியுமா?
தெரியல அதான் இப்படி பிரிச்சுப் போட்டுருக்கீங்க. இந்த பேப்பர்லயெல்லாம் என்னையப் பத்தி எழுதியிருக்காங்க. ஓ அப்படியா? என்றபடியே பேப்பர்களை அள்ளிக் கீழே போட்டான்.
நீலம்…. என்ன இதெல்லாம் அள்ளி கீழே போடுறீங்க?
பெறகு? இதெல்லம் வச்சு என்ன பண்ண?
உடனே ராஜேஷ் ஒரு பேப்பரை எடுத்துப் பிரித்துக் காட்டினான் பாத்தீங்களா? இதுல எப்படி இருக்கேன்னு என்று ராஜேஷ் காட்ட ம்….. இதெல்லாம் எதுக்கு?
கழுதைக்கு தெரியுமா? கற்பூர வாசனை. என்னோட முயற்சிக்கு என்னோட உழைப்புக்கு கெடச்ச மரியாதை.
அது என்னோட மரியாதை கௌரவம்
ஓகோ அலட்சியமாகப் பதில் சொன்னான் நீலம்
நீங்க எதுக்கு இங்க இந்தப் பாடுபடுறீங்க?
ம்.
என்ன …..ம்… என்னையப் பத்தி பக்கம் பக்கமா எழுதியிருக்காங்க அத விட்டுட்டு இவ்வளவு சாதாரனமா
சொல்றீங்க ?
‘‘இதெல்லாம் வச்சு என்ன பண்ணப் போறீங்க? மீண்டும் ராஜேஷைக் கோபப்படுத்துவது போல் பேசினான்’’ நீலம்
ஒங்கள மாதிரி ஆளுக்கெல்லாம் இதோட மரியாதை தெரியாது
சரி என்று தலையாட்டினான். முதல் நாள் பாதியிலேயே வேலையைப் போட்டு விட்டான்.
என்ன நீலம் இப்படி போட்டு விட்டுப் போறீங்க?
மிச்சத்த நாளைக்கு பாப்போம்.
நீலம் முடிச்சிரலாம் என்ற படியே வீட்டை விட்டு வெளியேறினான்.
மறுநாள் அவனின் அத்தனை பொருட்களையயும் ஒரே ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வீடு வந்தான்.
‘‘என்ன நீலம் ஏதோ ஒரு பொருள் ;ரெண்டு பொருள்ன்னு சொன்னீங்க; இவ்வளவு பொருள் இருக்கு’’
இதெல்லாம் சும்மா . இங்க பாருங்க. கேஸ் சிலிண்டர் அடுப்பு எனக் காட்டிக்கொண்டு அவனின் பொருட்களை மட்டும் பத்திரமாக எடுத்து ஷெல்பில் பேப்பரை விரித்து அடுக்கினான்.
எல்லா வற்றையும் ராஜேஷ் பார்த்துக்கொண்டே இருந்தான்.
ரெகுலேட்டர் வாங்கீரலாமா?
ம்
பணம்
அதற்கு ராஜேஷ் பணம் கொடுத்தான்
ஆட்டோவுக்கு நூற்றி அம்பது .ரெகுலேட்டர் ஏறநூத்தி அம்பது .மொத்தம் நானூறு ரூபா தரனும் சரியா? என்றபடியே வெளியே போனான். சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.
என்னாச்சு?
ரெகுலேட்டர் இல்ல.
ஆமா
பெறகு எதுக்கு இந்த கேஸ் அடுப்பு. எனக்கு வேணாம்.
ராஜேஷ் இதெல்லாம் நீங்க கத்துக் கிரணும்.
எனக்கு வேணாம்.
இதெல்லாம் தெரியாம எப்பிடி?
நான் என்ன நோக்கத்துக்கு வந்தனோ அதுல ஜெயிக்கலன்னா நீங்க சொல்றது சரி. சமையலல் வேலையெல்லாம் நமக்கு ஆகாது .ராஜேஷ் சொல்லியும் நீலம் விடுவதாக இல்லை
இதெல்லாம் தெரியாம எப்படி?
ஹலோ எனக்கு இதெல்லாம் தெரியாது.
இல்ல ஒங்க பொருட்களை கட்டி வச்சிட்டுப் போங்க
என்ன இப்படிச் சொல்றீங்க ராஜேஷ்
ஆமா கட்டி வச்சிட்டுப் போங்க. வாக்கு வாதம் முற்றியது.
என்ன இப்படிப் பேசுறீங்க
ஆமா தெரியாதத வச்சுட்டு நான் என்ன பண்ணப் போறேன் . சொல்லியும் நீலம் அத்தனையும் கட்டி வைத்து விட்டு வெளியேறினான்.
ஓ.கே நான் ஊருக்கு பொருள் களையும் இப்படி போட்டுட்டு போறீங்க . இதெல்லாம் ஒங்களோட பொருள் நீங்க தான் எடுத்து வைக்கணும்.
ஹலோ நான் தான் சொன்னனே எனக்கு சைனஸ் பிரச்சினை இருக்குன்னு. நீங்க பாட்டுக்கு போட்டுட்டு போனா எப்படி?
ஆமா … எனக்கு வேல இருக்கு இத கொஞ்சம் எடுத்து வச்சிட்டுப் போங்க
முடியாது ….. நான் ஊருக்குப் போகனும். பிடிவாதமாகச் சொல்லிவிட்டு வளியேறினான் நீலம்.
அவன் போன பிறகு ராஜேஷ் வைத்திருந்த எட்டாயிரம் ரூபாய் காணாமல் போயிருந்தது.
ஐயய்யோ இத யார்ட போய்க் கேக்குறது?
இவ்வளவு புத்தகம் பேப்பர்குவில்ல எப்படிக் கண்டுப்பிடிக்கிறது?
போச்சு எட்டாயிரம் ரூபாய். அவ்வளவு தானா?
அங்குமிங்கும் தேடினான் .பணம் அகப்படவே இல்லை. இனி அவ்வளவு தான் மனம் கிடந்து பதைத்தது.
ஒருவேள நீலம் எடுத்திட்டுப் போயிருப்பானோ?
ச்சே இருக்காது. உடனே நண்பன் கோகுலுக்கு போன் செய்தான்.
என்ன ராஜேஷ் கோகுல் வீட்டுல வச்சுருந்த எட்டாயிரம் ரூபா காணாமப் போச்சு?
எப்பிடி?
வீட்டச் சுத்தம் செஞ்சோம். எங்க வச்சேன்னு தெரியல .தேடிப்பாரு அங்க தான் இருக்கும். நம்பிக்கை சென்னான் கோகுல்
அள்ளிப்போட்ட குப்பை பேப்பர்களைத் தேடித்தேடிப் பார்த்தான்.
ம் ஹூகும். கிடைக்கவே இல்லை
பழையதை ஒதுக்கும்போது சாமி படங்கள் இருந்தன
ராஜேஷ்
ம் சொல்லுங்க நீலம் .இந்த சாமி படங்கள என்ன பண்ணுறது?
எல்லாம் குப்பையில தூக்கிப் போடுங்க
சாமியவா
ஆமா என்று நீலத்திடம் சொன்னது ஞாபகம் வந்தது .திருப்பதி படத்தின் கீழே ஒரு அழுக்குத் தூசி திரண்டு
கிடந்தது .அதை எடுத்துக் குப்பை தொட்டியில் போடப் போனான் ராஜேஷ். என்னவொரு ஆச்சர்யம். அங்கே அங்கே ராஜேஷ் தொலைத்த எட்டாயிரம் நான்கு இரண்டாயிரம் தாட்கள். அதுவரையில் கீழே கிடந்த சாமி படங்களை எடுத்துச் சுவற்றில மாட்டினான். ராஜேஷ் என்னவொரு அவஸ்தை சலித்து வெளியேறினாள் .
அதுவரையில் இல்லாத ஒரு நம்பிக்கை ராஜேஷின் மனதிற்குள் துளிர்த்தது.

ராஜா செல்ல முத்து