‘நாடக பிதாமகர்’ ஒய்.ஜி.பி. நூற்றாண்டு விழா: நல்லி குப்புசாமி, ஆந்திர கவர்னர் புகழஞ்சலி

சென்னை, செப். 24–
தமிழ் நாடக மேடையின் பிதா மகர்– நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பியின் (ஒய்.ஜி.பார்த்தசாரதி) நூற்றாண்டு விழா ‘பாரத் கலாச்சார், சார்பில் 30ந் தேதி வரை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
ஆந்திரா – தெலுங்கானா கவர்னர் எ.எஸ்.எல்.கள். நரசிம்மன், அவரது துணைவியார் இருவரும் குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். பிரபல பாடகி வாணிஜெயராம் இறைவணக்கம் பாடினார். நாடக மேடைக்கு ஒய்.ஜி.பியின் அளப்பரிய சேவைகளை பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி,  யுஏஏ  குழுவின் மூத்த உறுப்பினர்கள் ஏ.ஆர்.எஸ்., நடிகை லட்சுமி சிவச்சந்திரன் ஆகியோர் நினைவு கூர்ந்து, ஒய்.ஜி.பி.க்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்.
துவக்க விழாவில் டாக்டர் பத்மா சுப்பிரமணியத்தின் ‘‘ஒய்.ஜி.பி.க்கு பிடித்தவை’’ என்னும் தலைப்பில் சிறப்பு நடன நிகழ்ச்சியை நடத்தினார்.
பரீட்சைக்கு நேரமாச்சு (ஒய்.ஜி.மகேந்திரா), சாக்லட் கிருஷ்ணா (கிரேசி மோகன்), ரகசியம் பரம ரகசியம் (ஒய்.ஜி.மகேந்திரா) ஸ்ரீ தியாகராஜர் (டிவி வரதராஜன்), டாக்டர் விக்கி வினாயகராம் குழுவினரின் ‘சதுர கட லய சமர்ப்பணம், தமிழ் (மதுவந்தி அருணின் நாட்டிய நாடகம்)– நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
28ந் தேதி பிரபல பாடகர் ஜேசுதாஸ், 29ந் தேதி மொகம்மது ரஃபியின் அமரத்துவ பாடல்களில் அனில் பாஜ்பாய், 30ந் தேதி எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ‘அந்த நாள் ஞாபகம்…’– திரை இசைப் பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
துவக்க விழாவில் திருமதி.ஒய்.ஜி.பி, மகேந்திராவின் துணைவியார் சுதா மற்றும் குடும்பத்தினர், ஒய்ஜிபி குழுவினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றார்கள்.

Related Posts