ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் புதிய இந்தியா உறுதிமொழி ஏற்பு

ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில், புதிய இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்வி குழுமங்களில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதிய இந்தியா உறுதிமொழி அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முக்கிய அம்சங்கள் எடுத்துக் கூறப்பட்டன. அனைவரும் புதிய இந்தியாவினை உருவாக்கப்பாடுபட வேண்டும் என்று, வலியுறுத்தப்பட்டது.

இதில், மாணவர்கள், பேராசிரியர்கள், புதிய இந்தியாவிற்கு வழிநடப்போம். இந்தியாவினை சுத்தமாக வைப்போம். பசியில்லா ஊழற்ற, தீவிரவாதம் இல்லாத சாதி, மத பேதமில்லா இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்தனர். இக்கல்வி குழுமங்களின் முதுநிலை சமூகப் பணித்துறை மாணவர்கள், இதனை வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களில், இந்த உறுதிமொழியினை எடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில், இக்கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அறங்காவலர் சுந்தரராமன், முதல்வர்கள் ஜெனட், ரமேஷ், ஜீன் மார்சலின், ராதிகா, பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.