ஸ்ரீராம் இலக்கிய கழகத்தின் திருக்குறள் பேச்சு, ஓவியப் போட்டி

ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தின் திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் 400 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல் ஆய்வாளர் தா.ஹா.கணேஷ் பரிசுகளை வழங்கினார்.

இந்தியாவில் சீட்டு நிதி வர்த்தகத்தில் முன்னணி இடத்தை வகித்து வரும் ஸ்ரீராம் சிட்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், கோவையில் திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியினை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடையே நடத்தியது. இதில் சுமார் 400 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பரிசுகள் வழங்கி பாராட்டு

இப்போட்டியானது, சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தொடக்க விழாவில் சிஐஇடி கல்லூரி பேராசிரியர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார். நிறுவனத்தின் பொது மேலாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார்.

மதியம் நடைபெற்ற நிறைவு விழாவில், சபர்பன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா வாழ்த்துரை வழங்கினார். காட்டூர் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு காவல் துறை ஆய்வாளர் தா.ஹா.கணேஷ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

ஸ்ரீ ராம் சிட்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ஆனந்த் குமார் நன்றி கூறினார். இப்போட்டியானது, ஆகஸ்ட் 13,19,20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது. வெற்றி பெரும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.