தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஆக. 12–
தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்த வருகிறது.
சென்னை, வேலூர், திருவள்ளூர் காஞ்சிபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்தது.
இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று சென்னையில் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்
பட்டது.
தமிழகம் முழுவதும் பெய்த மழை அளவு வருமாறு:–
கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக இளையான்குடி, மதுக்கூரில் 8 செ.மீ., அச்சன்விடுதி – 7 செ.மீ., பொன்னேரி – 6 செ.மீ.,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம்  – 5 செ.மீ., சோழவரம், தாமரைப்பாக்கம், பள்ளிப்பட்டு, செங்குன்றம், பட்டுக்கோட்டை – 4 செ.மீ., ஊத்துக்கோட்டை, அம்பத்தூர், அதிராமபட்டினம், ஒரத்தநாடு – 3 செ.மீ.   மழையும் பெய்துள்ளது.