சீனாவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: 3 கிராமங்கள் பாதிப்பு

பீஜிங், ஆக. 12–
சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மங்கோலியாவின் ஒரு முக்கிய நகரில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றுக்கு 5 பேர் பலியாகினர் என சீன பத்திரிக்கை தெரிவித்துள்ளது. மேலும் 3 கிராமங்களை தாக்கிய இந்த சூறாவளியால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக 270 பேர் பாதிக்கப்பட்டனர். காயமடைந்த வர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.