வேலையில்லா பட்டதாரி – 2 டிரைலர்

தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் ரகுவரன் என்ற கேரக்டரில் சிவில் இன்ஜினியராக தனுஷ் நடித்திருக்கிறார். அமலா பால், தனுசுக்கு மனைவியாகவும் சமுத்திரகனி அப்பாவாகவும் விவேக் நண்பனாகவும் நடித்திருக்கிறார்கள்.

பாலிவுட் நடிகை கஜோல், நெகடிவ் ரோலில் நடித்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பின்பு, கஜோல் தமிழ் மொழி படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.