சரக்கு கப்பல் மீது அமெரிக்க போர் கப்பல் மோதல்: 7 வீரர்கள் மாயம்

டோக்கியோ, ஜூன் 17–
ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்காவின் பிட்ஸ் ஜெரால்டு என்ற போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. அது மிகவும் அதி நவீன தொழில் நுட்ப வசதி கொண்டது. இதில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன.
இது யோகோசுகா பகுதியில் தென் மேற்கில் 56 கடல் மைல் தொலைவில் வந்த போது எதிரே வந்த ஏசிஎஸ் கிரில்டல் என்ற சரக்கு கப்பலுடன் மோதியது.
அதில் அமெரிக்க போர்க் கப்பல் கடும் சேதம் அடைந்தது. ஏனெனில் சரக்கு கப்பல் இதைவிட அதிக எடையுடன் இருந்தது. ஏனெனில் அதில் 30 ஆயிரம் டன் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்தது.கப்பல்கள் மோதிய விபத்தில் அமெரிக்க போர்க் கப்பலில் இருந்த 7 வீரர்கள் மாயமாகிவிட்டனர். அவர்களின் நிலைமை என்ன வென்று தெரியவில்லை. இதற்கிடையே காயம் அடைந்த கமாண்டர் மற்றும் 2 பேர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.