அயர்லாந்து புதிய பிரதமருக்கு மோடி டெலிபோனில் வாழ்த்து

புதுடெல்லி, ஜூன் 17–
அயர்லாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளி லியோ வரத்கருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்ததாவது,
“அயர்லாந்தின் புதிய பிரதமர் வரத்கரை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். மேலும் இந்தியா – அயர்லாந்து இடையேயான நட்பினை மேலும் வலுப்படுத்த இந்தியா தனது பங்களிப்பை அளிக்க உறுதி அளித்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அயர்லாந்தின் பிரதமராக இருந்த என்டா கென்னி இந்த ஆண்டு தொடக்கத்தில் பதவி விலகியதை அடுத்து, அயர்லாந்தின் ஆளும் பைன் கேயல் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்வில் வெற்றி பெற்றுதை அடுத்து, பிரதமராகும் வாய்ப்பினை பெற்ற வரத்கர், பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
இந்தியாவை சேர்ந்த அவரது தந்தை அசோக் வரத்கர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.