மீண்டும் பீட்டா குறித்த சர்ச்சையில் எமி !

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்ட எழுச்சிக்கு பிறகு, பீட்டா என்ற வார்த்தையை கோலிவுட் நடிகைகள் சொல்லப் பயப்படும் நேரத்தில், எமி ஜாக்சன் தமிழர்களின் உணர்வை புரிந்துகொள்ளாமல் நடப்பதாக மீண்டும் சர்ச்சை எழுந்திருக்கிறது.

பீட்டாவை தீவிரமாக இங்குள்ளவர்கள் எதிர்த்தபோது 2.0 படப்பிடிப்பில் இருந்தார் எமி ஜாக்சன். பீட்டாவுக்கு ஆதரவான நடிகை என்பதால் ஷங்கரே எமியை பீட்டாவுக்கு எதிராக வாய்ஸ் கொடுக்க சொன்னாராம். ஆனால் முடியாது என்று சொல்லிவிட்டார்.

இப்போது பீட்டாவுக்கு ஆதரவாக படு கவர்ச்சியாக போஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார். இது பட வெளியீட்டின் போது பிரச்னையை ஏற்படுத்துமே என்று வருத்தத்தில்
இருக்கிறாராம் ஷங்கர். மேலும் 2.0 தவிர வேறு படம் எதுவும் எமிக்கு தமிழில் இல்லை. தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.