தன் மாணவருடன் சண்டை போடும் புரூஸ் லீ – வீடியோ

ஹாலிவுட் மற்றும் சீன மொழிப்படங்களில் ஆதிக்கம் செலுத்திய நடிகர் புரூஸ் லீ, தன் மாணவருடன் சண்டைபோடும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

சிறுவயதில் இருந்து தற்காப்புக்கலை மற்றும் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண் இவர், ஜீட் குன் டோ என்ற தற்காப்புக்கலையை தோற்றுவித்தவர். இவரது இறப்பிற்கு பின்னர், இவர் பங்குபெற்ற தற்காப்புக்கலை போட்டிகள் தொடர்பான வீடியோக்கள் பத்திரமாக பேணிக்காக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது முதல் முறையாக தனது மாணவர் ஒருவருடன் புரூஸ் லி சண்டையிடும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெரிய கூட்டத்தின் முன்னால் சண்டையிடுவதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்ட புரூஸ் லி கறுப்புப் போர் ஆடை அணிந்துள்ளார்.

இவர் தனது சிறந்த 10 மாணவர்களில் ஒருவரான Ted Wong என்பவருடன் மோதியுள்ளார், அந்த மாணவர் பாதுகாப்பு கியர் அணிந்துள்ளார். ஏனெனில் இந்த போட்டியின் போது இது கண்டிப்பான முறையில் அணியப்படவேண்டும் என்ற விதி இருந்தது. இந்த போட்டியில் தன்னை எதிர்த்த மாணவரை புரூஸ் லி வென்றுள்ளார், இந்த வீடியோ புரூஸ் லியின் மேலாளராக இருந்தவரிடம் இத்தனை ஆண்டுகள் இருந்தது. தற்போது இவரே முதல் முறையாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவால் புரூஸ் லியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.