ஹன்சிகா வேணாம் ! தயாரிப்பு நிறுவனம் பகீர்

ஹன்சிகாவிற்கு தற்போது மார்க்கெட் இல்லை, எனவே அவரை சங்கமித்ரா படத்தில் நடிக்க வைக்க வேண்டாமென தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

சுந்தர்.சிக்கு பிடித்த நாயகி ஹன்சிகா தான். அவரை சின்ன குஷ்பு என கோலிவுட் அழைக்கிறது. இருந்தாலும் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் ஸ்ருதி ஹாசன் விலகியதிலிருந்து அப்படத்தில் யாரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என்ற போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இதில் நயன்தாரா முன்னணியில் இருந்தாலும் சுந்தர்.சிக்கு விருப்பம், ஹன்சிகா மேல் தான். ஆனால் தயாரிப்பு நிறுவனமான தேனான்டாள், தற்போது ஹன்சிகாவிற்கு மார்க்கெட் இல்லை. எனவே அவர் வேண்டாம் என்கிறதாம்.