‘சுவாதி கொலை வழக்கு’ சினிமாவில் கற்பனையாக எந்தக் காட்சியையும் சேர்க்கவில்லை: டைரக்டர் ரமேஷ்செல்வன்

‘சுவாதி கொலை வழக்கு’ (நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த நிஜ சம்பவம்) –  படத்தில் கற்பனையாக எந்த ஒரு காட்சியையும் சேர்க்கவில்லை . நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம் என்றார் இயக்குனர் எஸ்.டி. ரமேஷ் செல்வன் (திரைக்கதையும் இவரே).
கதை, வசனம்: பி.ஆர்.ரவி, தயாரிப்பு: ஜெயஸ்ரீ புரொடக்க்ஷன்ஸ் சார்பில் எஸ்.கே. சுப்பையா.
இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜய்சங்கர், சுவாதி வேடத்தில் ஆயிரா, ராம்குமார் வேடத்தில் மனோ – புதுமுகம், வக்கீல் ராம்ராஜ் வேடத்தில் ஏ.கே.வெங்கடேஷ், பென்ஸ் கிளப் சக்தி – செங்கோட்டை இன்ஸ்பெக்டர்.
ஒளிப்பதிவு: ஜோன்ஸ் ஆனந்த், இசை: டிரம் டி ராஜ், கலை:ஜெய்சங்கர், எடிட்டிங்: மாரி, தயாரிப்பு நிர்வாகம்: சிவசங்கர்.