1229

சென்னை, ஜன. 12–
தமிழ்நாடு பாடநூல் மற்றும்  கல்வியியல் கழக தலைவராக இன்று பா.வளர்மதி பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
அவருக்கு அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக அண்ணா தி.மு.க. இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதியை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவை பா.வளர்மதி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இன்று காலை சென்னை எழும்பூரில் பள்ளி கல்வி இயக்குனரக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக பா.வளர்மதி பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
அப்போது அமைச்சர்கள் ஜெயக்குமார், பா.பெஞ்சமின், அண்ணா தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம், மாணவர் அணி செயலாளரும் மத்திய சென்னை தொகுதி பார்லிமெண்ட் உறுப்பினருமான எஸ்.ஆர்.விஜயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தி.நகர் பி.சத்தியா, மயிலாப்பூர் ஆர்.நடராஜ், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, விருகை ரவி எம்.எல்.ஏ., வி.பி.கலைராஜன் ஆகியோர் பா.வளர்மதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் டி.சிவராஜ், புஷ்பாநகர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் தி.நகர் கோ.சாமிநாதன், பகுதி செயலாளர் கே.மலைராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுபக்கர், சாய் வில்லியம்ஸ், பார்த்தசாரதி, ராமமூர்த்தி, எம்.சேகர், மன்சூர் அகமது, டி.டி.ராஜா, பச்சையப்பன், பெசன்ட் நகர் நடராஜன் மற்றும் பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா, கூடுதல் செயலாளர் ராகுல்நாத், பாடநூல் கழக மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.