எம்.ஜி.ஆர். பிறந்தநாள்: அன்னதானம், மருத்துவமுகாம், நலத்திட்ட உதவிகள்

1230

சென்னை, ஜன. 12–
எம்.ஜி.ஆரின் 100–வது பிறந்தநாளையொட்டி அன்னதானம், ரத்ததானம், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் மற்றும் கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியப்போட்டிகள் நடத்த அண்ணா தி.மு.க. மாணவர் அணி முடிவு செய்துள்ளது.
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவின்  ஆணைக் கிணங்க  அண்ணா தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச்  செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைக் கழகத்தில் மாணவர் அணிச் செயலாளர் எஸ்.ஆர். விஜயகுமார்  எம்.பி. தலைமையில் நடந்தது.
மாணவர் அணி துணைச் செயலாளர்கள் டாக்டர் சோலை இரா. கண்ணன்,  எம்.டி.பாபு, பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் இளம்பை இரா.  தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., மதுரை புறநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கி.  மாணிக்கம் எம்.எல்.ஏ., சிவகங்கை மாவட்டம் மாணவர் அணி துணைத் தலைவர் எஸ்.  மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஜி.எம்.  சாந்தகுமார், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் க.  பாலகுமார் ஆகியோர் வரவேற்று பேசினார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் உசேன்,  துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி. ஜெயராமன், அமைப்புச் செயலாளர்கள்  செ.செம்மலை, எம்.எல்.ஏ., என். தளவாய்சுந்தரம், அண்ணா தொழிற்சங்கப் பேரவைத்  தலைவர் தாடி ம. ராசு, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமைப்புச் செயலாளர்  மைதிலி திருநாவுக்கரசு, வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் வி.எஸ். சேதுராமன்,  அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், அமைப்புச்  செயலாளர் சுதா கே. பரமசிவன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்  சொரத்தூர் இரா. ராஜேந்திரன், மகளிர் அணி துணைச் செயலாளர் சி.ஆர். சரஸ்வதி  ஆகியோர் பேசினார்.
கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் மெட்ரோ ஜி. பிரபு நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
அன்பின் வடிவமாய், கருணையின் இருப்பிடமாய், ஏழை-எளிய மக்களை காக்கும் காவல் தெய்வமாய் மக்களால் நான், மக்களுக்காகவே நான், என்று
தமிழக மக்களுக்காகவே வாழ்ந்து, தமிழக மக்களின் நலன் ஒன்றே முழு மூச்சாக கொண்டு தமது வாழ் நாள் முழுவதும் அருந்தொண்டாற்றி மக்கள் சேவையில் மகத்தான சாதனை படைத்திட்டவரும், உலக தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கையாகவும், இந்த உலகத்தில் ஈடு இணையற்ற தலைவராகவும், உலகம் வியக்கின்ற வகையில் கழகத்தை வளர்த்து 6-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று இந்தியாவின் சிறப்பு மிக்க முதலமைச்சராக ஆட்சி நடத்தியவரும், தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் வழி நடத்தி ஏழை-எளிய சாமான்ய கடைக்கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் காட்டி. எந்நாளும் வாழும் வரலாறாக ஆனவரும். உலக மக்களால் புரட்சித்தலைவி அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா எதிர்பாராத விதமாக கடந்த 5.12.2016 அன்று இயற்கை எய்தியது குறித்து கழக மாணவர் அணி ஆற்றொணா துயரம் கொள்கிறது. புரட்சித்தலைவி அம்மாவின் மறைவால், பிரிவால் வாடும் கோடான கோடி கழக உடன்பிறப்புக்களுக்கும், தமிழக மக்களுக்கும் கழக மாணவர் அணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
மாணவ சமுதாயத்தின்
அட்சய பாத்திரம்
உலக தமிழர்களின் இதயத்தில் நிறைந்திருக்கும் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் வைப்பதற்கும், தமிழகத்தை காத்து, வழி நடத்திட இப்பூவுலகில் அவதரித்த புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலோடு பொது வாழ்வுக்கு வந்து ஏழை-எளிய மக்களுக்காவும், மகளிருக்காகவும், மாணவர்களுக்காகவும், சமூகத்தில் நலிந்த பிரிவினருக்காகவும் தொண்டு செய்வதில், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் கொள்கைகளை உறுதியாக ஏற்று, தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்த மாணவ சமுதாயத்தின் அட்சய பாத்திரம், புரட்சித்தலைவி அம்மாவுக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘‘பாரத் ரத்னா” விருது மத்திய அரசு வழங்கப்படவும், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை தொடர் சட்டப் போராட்டம் நடத்தி பெற்றுக்கொடுத்த புரட்சித்தலைவி அம்மாவுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் முழு திருவுருவ வெண்கல சிலை அமைப்பதற்கும், தமிழக மக்களின் நலனே தன் நலன் என்று வாழ்ந்து, மறைந்து இருக்கின்ற புரட்சித்தலைவி அம்மா நல்லடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில், உலகம் போற்றி வணங்குகின்ற வகையில் நினைவு மண்டபம், அமைப்பதற்கும், அம்மாவோடு 33 ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்த கழகப் பொதுச் செயலாளர் சசிகலாவின் வழியில் மத்திய அரசை கழக மாணவர் அணி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிது.
தமிழ் நாட்டின் உரிமைகளை நிலை நாட்டவும், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களுக்கு உறுதுணையாய் இருக்கவும், தமிழ் நாட்டில் சமூக நீதி காக்கவும், அனைத்து தரப்பு மக்களும், வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்ற லட்சியத்தோடு அண்ணா தி.மு.க.வின் அரசியல் பயணம் நடைபெற்று வருகிறது. இந்த ஒளி விளக்கு அணையா விளக்காக காலமெல்லாம் ஒளிரும் வண்ணம் கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் கருத்தாகப் பணியாற்றிடவும், அண்ணா தி.மு.க.வை வெற்றி பாதையில் வழி நடத்தி வந்த, நம் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் மறைவிற்குப் பிறகு கழகத்திலும், ஆட்சியிலும் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகியிருந்தது.
இச்சூழ்நிலையில் புரட்சித்தலைவி அம்மாவின் உயிர்காத்த அன்னையாக, கடந்த 33 ஆண்டுகாலமும், அம்மாவிற்காகவே தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து, அம்மாவிற்கு உற்ற தோழியாக விளங்கியும், அம்மாவின் பொது வாழ்க்கைக்கு உற்ற துணையாக இருந்தும், அம்மாவால் என் தாயைப் போன்று விளங்கி என்னை அரவணைத்து வருபவர் என்றும்,
அம்மாவிற்காக பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும் அனுபவித்த சசிகலா தான். தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல், கழக தொண்டர்களை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த தமிழக மக்களையும் காத்திட அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள, மக்கள் தலைவி சசிகலாவின் தலைமையில் விசுவாசமிக்க தொண்டர்களாக கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் தொடர்ந்து ஆற்றுவோம் என கழக மாணவர் அணி சூளுரை ஏற்கின்றது.
தமிழக மக்களை தன் உயிரினும் மேலாக நேசித்து, தனது வாழ்க்கையை, அர்ப்பணித்து வாழ்ந்து, எல்லோரது மனங்களிலும், நிரந்தரமாய் குடி கொண்டு இருக்கும். பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மக்களிடையே மிகுந்த செல்வாக்கும், வசீகரமும் பெற்ற தலைவராகவும், அவர் தொடங்கிய பல்வேறு புதுமையான திட்டங்களும், நலத்திட்டங்களும் நாடு முழுவதும் தற்போது பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் டாக்டர் எம்.ஜி.ஆர். தொடங்கிய சத்துணவு திட்டம். ஐ.நா. சபையிலும், உச்ச நீதி மன்றத்தின் பாராட்டைப் பெற்றதோடு, அனைத்து மாநிலங்களும் பின்பற்றுமாறு உத்தரவிடப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த எம்.ஜி.ஆர். அடித்தளம் அமைத்தவர். அவரது சேவையை பாராட்டும் வகையில், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா இம்மாதம் 17-ம் தேதி தொடங்குவதை முன்னிட்டு, மத்திய அரசு அவரது நினைவாக சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயம்” வெளியிட வேண்டுமென கழகப் பொதுச் செயலாளர் மக்கள் தலைவி சசிகலாவின் வழி நின்று மத்திய அரசை கழக மாணவர் அணி வலியுறுத்துகின்றது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், சிறைபிடிக்கப்படுவதையும், தடுத்து நிறுத்திட தமிழக மீனவர் நலன் காக்க, கழகப் பொதுச் செயலாளர், மக்கள் தலைவி, சசிகலாவின் வழியில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கழக மாணவர் அணி வலியுறுத்துகிறது.
நலத்திட்ட உதவிகள்
கழக தொண்டர்களையும், தமிழக மக்களையும் காக்க வந்த  கழகப் பொதுச் செயலாளர் சசிகலாவின் ஆணைக்கிணங்க, அண்ணா தி.மு.க.வின் நிறுவனர், பொன்மனச் செம்மல், பாரத் ரத்னா” புரட்சித்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாளினை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில், அவரின் பிறந்த தினத்திலிருந்து தமிழகமெங்கும் அன்னதானம், ரத்ததானம், மருத்துவ முகாம் மற்றும் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், பள்ளி-கல்லூரிகள்தோறும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் சிறப்பினை அடுத்த தலைமையினரும் அறியும் வகையில் கட்டுரைப் போட்டிகள், பேச்சு போட்டிகள், கவிதை போட்டிகள், ஓவியப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுவது என கழக மாணவர் அணி தீர்மானிக்கிறது.
ஜல்லிக்கட்டு
‘‘ஜல்லிக்கட்டு” வீர விளையாட்டு சங்க காலம் முதல், கடந்த பல நூறு ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் இளைஞர்களின் சாகச விளையாட்டு. இது தமிழர்களின் வீர மரபோடு இரண்டறக் கலந்த ஒன்று. பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாகத் தொடர்ந்து பன்னெடுங்காலமாக நடைபெற்று வரும் ‘‘ஜல்லிக்கட்டு” தமிழகத்தில் காளை மாடுகளுக்கு செய்யப்படும் சிறப்பே தவிர, மிருகவதை அல்ல என்று பண்பாட்டு உண்மையை ஏற்றுக் கொண்டு உடனடியாக ஓர் அவசரச் சட்டத்தை இயற்றுவதன் மூலம், வரும் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் போது ‘‘ஜல்லிக்கட்டு” நடத்தப்பட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று புரட்சித் தலைவி அம்மா பலமுறை போராடி உள்ளார். கழக பொதுச் செயலாளர், மக்கள் தலைவி சசிகலா மத்திய அரசை வலியுறுத்தி இருக்கின்றார். முந்தைய மத்திய காங்கிரஸ் அரசில் தி.மு.க. அங்கம் வகித்த போது தமிழர்களின் வீர விளையாட்டான, ‘‘ஜல்லிக்கட்டினை” தடை செய்யும் வரை வாய் திறக்காமல், எதிர்ப்பு தெரிவிக்காமல் தமிழ் நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து, காலச் சூழ்நிலைக்கேற்ப சுய நல, சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் தீயசக்தி கருணாநிதி, ஸ்டாலினுக்கும், தி.மு.க.–-காங்கிரஸ் கட்சிகளுக்கும் கழக மாணவர் அணி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.