ஜீவி பிரகாஷ் – ஆர்.ஜே.பாலாஜி – பிரகாஷ்ராஜ் ஊர்வசி – மனோபாலா லூட்டியோ லூட்டி…! ‘கடவுள் இருக்கான் குமாரு’ – கதை இருக்கா – ராஜேஷு?

kadavul-irukkan-kumaru-review3-19-1479540806

‘பொன்விழா’ ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவின் தயாரிப்பு ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஜீ.வி.பிரகாஷ் நடித்து ‘ஏ’ சர்டிபிகேட் இல்லாமல் வந்திருக்கும் முதல் ‘யு’ படம் என்பது தயாரிப்பாளர் சிவாவுக்கு ஆறுதல்.
முதல் படத்தில் ஜீவி.பிரகாஷ்குமாரை எப்படி பார்த்தோமோ அப்படியேதான் இந்த 5வது படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’விலும். டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களில் மட்டும் நல்ல முன்னேற்றம். அந்தக்கால ‘பால்பாயிண்ட் பென்’ல் இருக்கும் ‘ஸ்பிரிட்’ கணக்காய் துள்ளல்.
ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் எப்படி குறுக்கும் நெடுக்குமாக நடந்து நண்பர்களிடம் பேசுவாரோ அப்படித்தான் தெரிகிறார் காமிரா முன்னாலும்.
கிறிஸ்தவப் பெண் ஆனந்தியை துரத்தி துரத்திக் காதலிக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக வீட்டில் நிக்கி கல்யாணியைப் பேசி கல்யாணத்தை நடத்தவிருக்கிறார்கள். திருமணத்துக்கு முதல் நாள் நண்பர்களோடு ‘பேச்சிலர்ப் பார்டிடிக்குப் புறப்பட்டுச் செல்லும் ஜீவி.பிரகாஷ் குமார், காரில் மது பாட்டில் கடத்திய குற்றத்துக்காக இன்ஸ்பெக்டர் பிரகாஷ்ராஜின் பிடியில் சிக்க திரைக்கதையில் திடீர் திருப்பம். போலீஸ் பிடியில் சிக்கியதால் காரையோடு தானும் விடுதலையாக ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கும் பிரகாஷ்ராஜின் பிடியிலிருந்து விடுபட, வரப்போகும் மனைவி நிக்கியிடம் பணம் கேட்டு கெஞ்சுகிறார் ஜீவி.பி. அவரோ கை விரிக்கிறார். அதே நேரம் துரத்தித் துரத்தி காதலித்த ஆனந்த கைகொடுத்து உதவுகிறாள். இப்படி நகரும் கதையில் க்ளைமாக்சில் – நிச்சயிக்கப்பட்ட மணமகள் தாலிகட்ட மறுக்க, காதலி மனைவியாகிறாள் ஜீ.வி.பிக்கு அது எப்படி?
நகைச்சுவையாய் சொல்கிறோம் என்றதன் பெயரில் லூட்டி அடித்திருக்கிறார் இஷ்டத்துக்கு – இயக்குனர் எம்.ராஜேஷ் அண்ட் கோ.
நிச்சயிக்கப்பட்ட மணமகள் நிக்கி – ஜீவிபி காட்சிகள் 20 நிமிடம், துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஆனந்தி ஜீவிபி காட்சிகள் 20 நிமிடம், பிரகாஷ்ராஜ் – சிங்கம்புலி – ரோபோ சங்கரின் பிடியில் ஜீவிபி ரேடியோ பாலாஜியின் லூட்டி 20 நிமிடம், பேய் ரூபத்தில் உலா வரும் மொட்டை ராஜேந்திரன் – கோவை சரளாவுடன் ஜீ.வி.பி. பாலாஜி காட்சிகள் 20 நிமிடம், ஆனந்தி நிக்கியுடன் ஜீவிபி ‘டூயட்’ பாடல் காட்சிகள் 20 நிமிடம், ரேடியோ ஜாக்கி பாலாஜி – ஜீவிபி காட்சிகள் 20 நிமிடம், எம்.எஸ்.பாஸ்கர் – ஆனந்தி – ஜீவிபி பாலாஜி காட்சிகள் 20 நிமிடம், மனோபாலா – ஊர்வசி – ஜீ.வி.பி. பாலாஜி பேசுவதெல்லாம் உண்மை டிவி ஷோ காட்சிகள் 20 நிமிடம்… இப்படி 140 நிமிஷத்துக்கு காட்சிகளை ஓடவிட்டிருக்கிார் எம்.ராஜேஷ்.
* ‘பேசுவதெல்லாம் உண்மை….’ தனியார் டிவி நிகழ்ச்சியைக் கிண்டலடிக்கும் காட்சிகள்.
* ‘இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்…’ பாழடைந்த பங்களாவில் பேயோடு பேயாக மொட்டை ராஜேந்திரன் கோவை சரளா, ஜீவிபி, பாலாஜி, ரோபோ சங்கர், சிங்கம்புலி வெள்ளை உடையில் பேயாட்டம் ஆடும் காட்சிகள்…
* சாலை விபத்தில் ஜீ.வி.பிரகாஷ், பாலாஜி : தனியார் டிவிக்கள் நேரலையில் விபத்தை செய்தியாக சொல்வது எப்படி என்பதை ‘ரோபோ’ சங்கர் கமல் ஸ்டைலில் வர்ணித்து, தகவல் கொடுக்கும் காட்சிகள்.
சாமான்யன் வாய்விட்டு சிரிப்பான் என்ற எதிர்பார்ப்பில் எம்.ராஜேஷ் தன் இஷ்டத்துக்கு எடுத்திருக்கிறார்.
வாயைத் திறந்தால் மூடவே மாட்டாரா இந்த ரேடியோ ஜாக்கி பாலாஜி. லொட லொடா… லொட லொடா… என்று பேசிக்கொண்டே இருக்கும் சந்தானம் விட்ட இடத்தைப் பிடிக்கலாம் என்ற நினைப்பா…?
இசை ஜீ.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு : சரவணன்.
லூட்டி அடித்திருக்கிறார்கள், லூட்டி அடித்திருக்கிறார்கள். கடவுள் இருக்கான் குமாரு, இது டைட்டில். கதை இருக்கா ராஜேு… இது                   கேள்வி.