பெண்களுக்கான மூட்டுவலி… அதற்கான காரணங்கள் என்ன?

201608151056171674_varma-points-to-arthritis-pain_secvpf-gif

ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ்:-
இந்த வாதம் 20 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு வரக்கூடியதாகும். இதில் ஆண்களை விட பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். இதன் அறிகுறிகளாக அதிகாலை நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு மூட்டுகளில் ஏற்படும் இறுக்கம் 6 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக காணப்படும்.
முதலில் கை, கால்களில், விரல் மூட்டுகளில் ஆரம்பித்து அதற்கு மேற்பட்ட மூட்டுகளை பாதிப்படைய செய்கின்றன. ரத்தத்தில் ஆர்ஏஎப் சோதனை மூலம் நோய் நிர்ணயமாகி இருப்பதை அறிந்து கொள்ளலாம். பொதுவாக இது பரம்பரையாகவும், அடிபடுவதாலும், மன உளைச்சலாலும் கூட வரலாம்.
மூட்டுகளை தவிர நுரையீரல், இருதயம், கண்கள் இவற்றிலும் பாதிப்பு உண்டாக கூடும். இவ்வாதத்தில் முக்கிய அறிகுறியாக மூட்டுகளில் சிறு, சிறு கட்டிகள் உண்டாகி மூட்டுகளின் அசைவற்ற தன்மைக்கு ஒரு காரணமாகிறது.
மூட்டுகளின் அமைப்பு மாறி வாத்து கழுத்து போல் ஆகும். கட்டை விரல் `இசட்’ வடிவில் ஆகும். இது ஒரு கொடிய வியாதி. இதற்கு முறையான மருந்துகள் நீண்டநாள் எடுக்க வேண்டும். அப்போது தான் கட்டுப்படுத்த முடியும்.
பெரியவர்களை பாதிக்கும் மூட்டு வலி:-
பெரியவர்களை பாதிக்கின்ற மூட்டு வலியை தேய்வு வாதம் என்றும் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் என்று அழைக்கிறோம். பொதுவாக 55 முதல் 70 வயதுள்ளவர்களை பாதிக்க கூடிய இந்நோய் தற்போது 35 வயதுக்கு முன்பிருந்தே காணப்படுகிறது.
இந்த வாதம் அடிபட்டதினால், எலும்பு முறிவினால், ஹார்மோன் கோளாறுகளினால், அதிக நடையால், அதிக எடையால் வரக்கூடும். சில பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலத்திலும் பாதிக்கப்படுகிறார்கள்.
மூட்டுப்பகுதி வெளிப்புறமாக வளைந்து நடக்க முடியாமல் வலியால் துடிப்பது நோயின் முற்றிய நிலை ஆகும்.
பரிசோதனைகளால் நோய் நிர்ணயிக்கப்பட்டு தகுந்த ஓய்வுடன் கூடிய மருந்துகள் கொடுத்து இந்த வியாதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இளவயதினர் பூரணமாக சுகம் பெறுவர். நாளை மேலும் சில மூட்டு வலிகளையும், அதற்கான தீர்வுகளையும் காணலாம்…