தேன் கலந்த சீரகத் தண்ணீர் குடிப்பதால் வரும் நன்மை!

8-jeera-water-09-1470715363சமையலறையில் உள்ள பொருட்கள் சமையலுக்கு மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். அங்குள்ள ஒவ்வொரு பொருட்களிலும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
சொல்லப்போனால், மருத்துவருக்கும் மருந்துகளுக்கும் செலவழிப்பதற்கு பதிலாக, சமையலறைப் பொருட்களுக்கு பணத்தை செலவு செய்தால், நோய்கள் ஆரோக்கியமான முறையில் குணமாவதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, அடிக்கடி ஆரோக்கிய பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
அப்படி ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது தான் சீரகம். இந்த சீரகத்தைக் கொண்டு ஒரு பானம் தயாரித்து குடித்து வந்தால், நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளைப் போக்கலாம்.
சரி, இப்போது அந்த சீரக பானத்தின் செய்முறை மற்றும் அதனைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: சீரகம் – 2 டீஸ்பூன் தேன் – 2 டீஸ்பூன் தண்ணீர் – 1 கப்
செய்முறை: முதலில் நீரை கொதிக்க வைக்கவும். பின் சீரகத்தைப் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி, தேன் கலந்தால், மருத்துவ குணம் நிறைந்த சீரக பானம் தயார்!
* சீரக பானத்தை தினமும் ஒரு கப் குடித்து வருவதன் மூலம், இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, உடல் சுத்தமாகவும், நோய்களின் தாக்குதலின்றியும் இருக்கும்.
* தேன் கலந்த சீரகத் தண்ணீர் செரிமான அமிலத்தின் சுரப்பை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும்.
மேலும் சில நன்மைகளை நாளை பார்க்கலாம்…