ஜெயலலிதா முதல்வராக கரூரில் 1 லட்சத்து 8 தீபம் ஏற்றி சிறப்பு பிரார்த்தனை

1010சென்னை, மே 10–
ஜெயலலிதா நீடூழி வாழவும், விரைவில் முதல்வராக வேண்டியும் தமிழகம் முழுவதும் இன்று கோவில் களில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து யாகங்கள், பாலாபிஷேகம், அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகின்றன.
ஜெயலலிதா முதல்வராக வேண்டி, கரூர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் கரூர்  கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அலங்காரவள்ளி சௌந்திரநாயகி அம்பாள்  சன்னதியில் லலிதா திருட்சதை ஹோமம் மற்றும் லட்சத்து எட்டு தீபம் ஏற்றி  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அண்ணா தி.மு.க. கொள்கைப் பரப்பு  செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் தம்பிதுரை, மாவட்டச்  செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி ஆகியோர்  கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் பாப்பா சுந்தரம், காமராஜ், மாவட்ட  ஊராட்சிக்குழுத் தலைவர் கீதா மணிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஆர்.  காளியப்பன், மாவட்ட பொருளாளர் பிகேஎஸ். முரளி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர்  கே.கனகராஜ், நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் ஆகியோர் உடன் உள்ளனர்.
பொள்ளாச்சி வி.ஜெயராமன்
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்பூர் புறநகா் மாவட்டம் உடுமலை   ஸ்ரீமாரியம்மன் திருக்கோயிலில் அரசு கேபிள்டிவி வாரியதலைவா் உடுமலை  கே.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில் தங்ககவசம் சாத்தி சிறப்பு பூஜை  மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும்  துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், சி.சண்முகவேலு எம்எல்ஏ,   சி.மகேந்திரன் எம்பி, கே.ஜி.எஸ்.சண்முகம், சரளை ரத்தினசாமி,  கே.ஜி.எஸ்.ஷோபனா, எம்கண்ணாயிரம், எ.ஹக்கீம், கே.ஆறுச்சாமி, மெட்ராத்தி  அண்ணாதுரை, எம்.சுந்தரசாமி, வி.செந்தில்குமார், ஜி.வி.வாசுதேவன்,  எஸ்.பழனிச்சாமி, வி.சுதரராஜ், ராமகிருஷ்ணன், கண்ணன், எம்.எஸ்.காளீஸ்வரன்,  முத்துராமலிங்கம், பலக்கடைபாஷா, பி.கே.ராஜ், முருகவேல், சற்குணசாமி,  பொன்னுச்சாமி, தங்கராஜ், வரதராஜ், குமரவேல், மதியழகன், காஜாமைதீன்,  கே.என்.ராசு, சிவக்குமார், யு.கே.பி.ராதா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கோவை புறநகர் மாவட்டம் சார்பில், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
அண்ணா  திமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க  வேண்டி, கோவை புறநகர் மாவட்டம் சார்பில், கடந்த 8ந்தேதி முதல் சிறப்பு யாக  பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தென்கயிலை  மலையான் என்று அழைக்கப்படும் பூண்டி அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர்  திருக்கோவிலில், காலை 6 மணி முதல், 108 திரவியங்களுடன் விக்னேஷ்வர சகஸ்ஹர  ஹோமம், ருத்ர ஹோமம், சத்ருசம்ஹார ஹோமம் மற்றும் 108 சங்கு அபிஷேகம் ஆகியவை  வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
10,008 விளக்கு பூஜை
இது  தவிர, குனியமுத்தூர் அருள்மிகு ஸ்ரீ சாந்தி துர்கா பரமேஸ்வரி அம்மன்  திருக்கோவிலில் மஹா சுதர்சன ஹோமம் மற்றும் நவகிரஹ ஹோமம் நடைபெற்றது. இதில்,  அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்.
மேலும்,  ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு  அபிஷேக வழிபாடு மற்றும் 10,008 விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.  சிறப்பு  பூஜையில், சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை, நமச்சிவாயம், ஆலாந்துரை  துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகள் நடைபெறும்  இடங்களில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சிறப்பு பூஜை நாளை (11ந்தேதி) வரை நடைபெற உள்ளது.
6667 பெண்கள்  பால்குடம்
ஜெயலலிதா  மீண்டும் முதல்வராக வேண்டி, திருவாரூர் தியாகராஜ கோவிலில் அமைந்துள்ள  ரௌத்திர துர்க்கை அம்மனுக்கு அமைச்சர் காமராஜ் தலைமையில் 6667 பெண்கள் 3  கிலோ மீட்டர் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம்  நடைபெற்றது. இதில் கோபால் எம்.பி., மன்னார்குடி நகர்மன்றத்தலைவர் சுதா  அன்புச்செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர் மலர் மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி  செயலாளர் பாப்பாத்தி மணி ஆகியோர் உடன் உள்ளனர்.
அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை  சார்பில்செங்கம் காளியம்மன் கோவிலில்   நடைபெற்ற  208 குத்துவிளக்கு பூஜையை  அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பேரவை செயலாளர்  பெருமாள், கே.ராஜன், ஏ.கே.அரங்கநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்  ராமச்சந்திரன், மாவட்ட ஊராடசிக்குழு தலைவர் நைனாகண்ணு, மாவட்ட துணை  செயலாளர் நளினி மனோகரன், தொகுதி செயலாளர்  பாண்டியன், ஒன்றிய குழு தலைவர்  கணேசன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் புருஷோத்தமன், ஒன்றிய செயலாளர்  மதியழகன், ஒன்றிய பேரவை செயலாளர்  கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர்கள்  வெங்கட்ராமன், ஜோதி, கிருஷ்ணமூர்த்தி, செங்கம் நகர பேரவை செயலாளர்கள்  குமார், பொன்ராஜா, அருள், கோவிந்தன், பழனி, சண்முகம், திருமேனி, உத்தண்டி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
ஜெயலலிதா  மீண்டும் முதல்வராக வேண்டி, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரும்,  அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் குடுமியான்மலை  ஸ்ரீ  அகிலாண்டேஸ்வரி சமேத சிகா கிரீஷ்வரர் ஆலயத்தில் 1008 குத்து விளக்கு  பூஜையும், 9 சிவாச்சாரியார் நடத்திய நவசக்தி பூஜையும், சந்தன காப்பு  அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
அமைச்சர்கள் பி.வி. ரமணா,
எஸ்.அப்துல் ரஹீம்
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாள் கோவிலில்  துளசி அர்ச்சனை மற்றும் தீப வழிபாடு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.வி. ரமணா தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், என்.எஸ்.ஏ. இரா. மணிமாறன் எம்.எல்.ஏ., சி.ஒய். ஜாவித் அகமது, நகர செயலாளர் தர்மலிங்கம், ரமேஷ் பாபு, ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு புட்லூர் சந்திரசேகர், கமாண்டோ பாஸ்கர், என்.எஸ். பிரகாஷ்,  எஸ்.கோபிநாத், கே.எஸ்.ரவிச்சந்திரன், கமல்ராஜ், ஆர்.சி. தீனதயாளன், முகவை சுந்தரம்  கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அண்ணா தி.மு.க.  சார்பில் மாவட்டச் செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமையில் முகப்பேர்  சந்தான சீனிவாச பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு சகஸ்ர நாம  பூஜையில்  அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், அமைச்சர்கள் பி.வி. ரமணா, எஸ்.அப்துல்  ரஹீம், இளைஞரணி செயலாளர் வி.அலெக்சாண்டர், எம்.எல்.ஏ.க்கள் மாதவரம்  வி.மூர்த்தி, பொன். ராஜா, துணை மேயர் பா.பெஞ்சமின், நகர செயலாளர்  என்.அய்யனார் அவைத் தலைவர் வி.எஸ்.ரவி, எம்.டி. மைக்கேல்ராஜ், எம்.ஆர்.  ஆறுமுகம், முகப்பேர் பாலன், டன்லப் வேலன், எல்.ஜி. பிரகாஷ் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
விருதுநுகர் மாவட்ட அண்ணா தி.மு.க.  சார்பில் சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டி மாரியம்மன் கோயிலில் அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஸ்ரீதில ஹோமம் நடைபெற்றது. இதில்   ராதாகிருஷ்ணன் எம்.பி., சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்  சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, சாத்தூர் ஒன்றிய  செயலாளர் சண்முகக்கனி, ரயில்வே பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர்  கதிரவன், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்  முத்துராஜ், மாவட்ட பிரதிநிதி வீரையா, இளைஞரணி ஒன்றிய துணை செயலாளர்   கூடலிங்கம், ஊராட்சி கழக செயலாளர் குமரேசன், கிளைச்செயலாளர்கள்  ராமராஜ்பாண்டியன், தனுசு, முத்துராஜ், மற்றும் இளைஞர் பாசறை சங்கர்,  செல்லப்பாண்டி, வாட்ஸ் அப் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா  மீண்டும் முதல்வராக வேண்டி, வானூர் ஒன்றிய அண்ணா தி.மு.க. சார்பில்  பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம் தலைமையில்  நடைபெற்ற 167 லிட்டர் பால் அபிஷேகம், திருமஞ்சனம், சிறப்பு பூஜையில்  ஜானகிராமன் எம்.எல்.ஏ., வானூர் சேர்மன் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ. கணபதி,  மாவட்ட கவுன்சிலர்கள் சக்கரபாணி, ஜெய்சங்கர், ஊராட்சி மன்றத்தலைவர்கள்  ரங்கநாதன், அறிவழகன், லலிதா ஆறுமுகம், ரவிவர்மன், வேணு, சின்ராசு,  வீரமுத்து, விவசாய அணி ஒன்றிய செயலாளர் அர்ச்சுனன், ஒன்றிய கவுன்சிலர்  சிவக்குமார் மற்றும் உமாபதி, ராதாகிருஷ்ணன், கரசானூர் லைலா ஜெயகண்ணன்,  மொரட்டாண்டி குணசேகரன், முருகையன், துரை, எறையூர் ஜானகிராமன், அம்பாள் நகர்  ரமேஷ், அருவாய்பாக்கம் சங்கர், சந்திரன், ராமசந்நதிரன் உப்பு வேலூர்  அகமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.