சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற ரூ.616 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, மார்ச். 25
சென்னை மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வசதியாக 615 கோடியே 78 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
தமிழகத்தில் நகர்ப்புர ஏழைகள்   அனைவருக்கும் வீட்டுவசதி அளிக்கும் குறிக்கோளை எய்திட பெரும் முதலீடு  தேவைப்படுகிறது.  பல்வேறு திட்டங்களின் மூலம் கிடைக்கப்பெறும் நிதி  ஆதாரங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கிடைக்கச்  செய்வதற்காக மாநில அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.
கடந்த  நான்கு ஆண்டுகளில், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கான 2,293  குடியிருப்புகள் உள்ளிட்ட 10,059 குடியிருப்புகளை 565.92 கோடி ரூபாய்  செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அமைத்துள்ளது.  மேலும், தமிழ்நாடு  குடிசைப்பகுதி மாற்று வாரியம் 2,050.72 கோடி ரூபாய் செலவில் 45,473  குடியிருப்புகளைக் கட்டி முடித்துள்ளது.
புதிதாகத்  தொடங்கப்பட்டுள்ள சர்தார் பட்டேல் நகர்ப்புர வீட்டுவசதி இயக்கம் மாநில  அரசின் முயற்சிகளுக்கு கணிசமான அளவிற்கு நிதியுதவி பெற்றுத் தரும் என  நம்புகிறேன்.  அனைவருக்கும் வீட்டுவசதி அளிக்கும் இத்திட்டத்தின் கீழ்,  2015-2016 ஆம் ஆண்டு வரவு?செலவுத் திட்டத்தில் 289.16 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் படிப்படியாக  செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.  இதுவரை கடன் மற்றும் பங்கு மூலதன  உதவியாக 3,105.82 கோடி ரூபாயை மாநில அரசு அளித்து தன்னுடைய பங்களிப்பை  முழுமையாக நிறைவேற்றியுள்ளது.  2015?2016ஆம் ஆண்டு வரவு?செலவுத்  திட்டத்தில் இப்பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக 615.78 கோடி  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்கு மத்திய அரசு  கடனாகவும், பங்கு மூலதன உதவியாகவும் ஏற்கனவே அளிக்கவேண்டியுள்ள 1,498.74  கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விரைவில் வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.