புதுக்கோட்டையில் தழ்நாடு அரசு இசைப் பள்ளி நடத்திய கலை நிகழ்ச்சி

புதுக்கோட்டை, மார்ச் 3–
புதுக்கோட்டை   நகராட்சி திலகர் திடலில்  மாவட்ட செய்தி மக்கள்  தொடர்புத்துறையின்  சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்  ந.சுப்ரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.
கலெக்டர் சு.கணேஷ்   தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் ந.சுப்ரமணியன் கூறியதாவது:-–
தமிழக அரசு  ஏழை, எளிய  மக்களின் நலனுக்காக  பல்வேறு நலத்திட்டங்களை  அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசு   செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்கள்  அறிந்திடும்  வகையில்  தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து  செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் திலகர் திடலில்- செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில்  புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்பட கண்காட்சியில்  தமிழக அரசின்  திட்டங்களான விலையில்லா மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை, விலையில்லா வெள்ளாடுகள் மற்றும்  கறவை மாடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா அரிசி,  பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினி, பேருந்து பயண அட்டை,  காலணிகள், மிதிவண்டிகள் போன்ற  14 வகையான கல்வி உபகரணங்கள், பசுமை வீடுகள் கட்டும் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்  போன்ற   அரசின் பல்வேறு  திட்டங்களின் சாதனைகள்   குறித்த  புகைப்படங்கள்  மற்றும்  நமது மாவட்டத்தில்  பயனாளிகளுக்கு  வழங்கப்பட்டுள்ள  அரசின்  நலத்திட்ட  உதவிகள்  குறித்த  புகைப்படங்கள்  பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்   அமைக்கப்பட்டிருந்தது.    இந்த புகைப்படங்கள்  அரசின் சாதனைகளை  விளக்கும் வகையில்   அமைந்துள்ளது.
எனவே   இதன்  மூலம் பொதுமக்கள் அனைவரும் அரசின் நலத்திட்டங்களை அறிந்து பயனடைய வேண்டும். இவ்வாறு  அமைச்சர் ந.சுப்ரமணியன் கூறினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-–
தமிழக அரசு  ஏழை, எளிய  மக்களின் நலனுக்காக  பல்வேறு நலத்திட்டங்களை  அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.   தமிழக அரசு   செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும்  பொதுமக்கள்    அறிந்திடும்  வகையில்  தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து    செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த மூன்றாண்டுகளில் சென்னை நீங்கலாக   31 மாவட்டங்களில் உள்ள 186 ஊராட்சி ஒன்றியங்களில்  சிறு புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு இதன் மூலம் 8 லட்சத்து 44 ஆயிரம் பேர் பார்வையிட்டும்,  அனைத்து மாவட்டங்களிலும்  64 புகைப்பட கண்காட்சிகள்  நடத்தப்பட்டு   இதன் மூலம்  6 லட்சத்து  70 ஆயிரத்து  850 பேர் பார்வையிட்டு   பயனடைந்துள்ளனர்.
மேலும்  அனைத்து மாவட்ட  தலைநகரங்களிலும் கலெக்டர் அலுவலகங்களில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில்  மின்னணு விளம்பரத் திரைகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் எளிதில்  அறிந்து கொள்ளும் வகையில்  தினமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் செய்தி மக்கள் தொடர்புத்துறை  தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக விளங்குகிறது என்று  அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
பின்னர்    கலெக்டர் தலைமையில்  அமைச்சர்கள் ந.சுப்ரமணியன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த   கலை நிகழ்ச்சியில்  தமிழ்நாடு அரசு இசைப் பள்ளி மற்றும் நேரு யுவகேந்திரா  மூலம்   நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஆர். கார்த்திக்தொண்டைமான் (புதுக்கோட்டை),  மாவட்ட  வன அலுவலர் என்.தங்கராசு,  மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் வி.சி.ராமையா, நகர்மன்றத் தலைவர் ராஜசேகரன்,   நகர்மன்ற துணைத் தலைவர் சேட், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(விளம்பரம்) பிரபாகரன்,   நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கர்,  கண்ணன், தியாகு, ஐயப்பன்,  மலர்விழி முத்து,  மோகன்,  உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும்  அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.