பிரதிக்ஷா தர்ஷினி நாட்டியமாடி சாதனை

சென்னை, ஜூன்.25-
இடைவெளியின்றி தொடர்ந்து 3 மணி நேரம் பரத நாட்டியம் ஆடி 10ம் வகுப்பு மாணவி பிரதிக்ஷா தர்ஷினி சாதனை புரிந்தார்.
இவர் செயின்ட் ஜான் பள்ளி மாணவி அடையார் கலாஷேத்ரா பரத நாட்டிய பள்ளியின் பகுதி நேர மாணவி இவர் 3 மணி நேர பரத நாட்டிய நிகழ்ச்சியை பெருமளவில் இவரது ரசிகர்கள் கண்டு களித்தனர்.
ரிதாஞ்சலி, பரதக் கல்லூரியின் ரதிஷ் கிருஷ்ணா சோபியா ரதிஷ் ஆகியோர் பிரதிக்ஷாவின் குருவாக, பரதம், குச்சுப்புடி பயிற்றுவிக்கின்றனர்.
தர்ஷியினியின் தந்தை ஆர்.நாகராஜ் பேசுகையில், பரத நாட்டியத்தில் ஒரு பாடலுக்கு பரதம் ஆடியவுடன் கலைஞர்கள் சிறிது ஓய்வு எடுப்பது வழக்கம். ஆனால் தர்ஷினி முழு ஆர்வத் துடன் புத்துணவர்வுடன் ஓய்வின்றி சாதனை படைத்து பரத நாட்டியம் ஆடி உள்ளார். தர்ஷினி 3 மணி 20 நிமிடங்கள் பரத நாட்டியம் ஆடினார்.
பிரதிக்ஷா தர்ஷினி 9 வயதில் அரங்கேற்றம் செய்தார். இவர் சிதம்பரம் நடராஜர் கோவில், கேரளா குருவாயூர் கோவிலிலும் பரத நாட்டியம் ஆடி உள்ளார். ஏற்கனவே தொடர்ந்து 1½ மணி நேரம் பரத நாட்டியம் ஆடி விருது பெற்று உள்ளார்.
ரிதாஞ்சலி பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் கீழ்கட்டளை, நங்கநல்லூர், மாடம் பாக்கம், ஆகிய இடங்களில் பரத நாட்டியம், குச்சுப்புடி நாட்டியங்களை இதன் குரு ஏ.எஸ். ரதீஷ் கிருஷ்ணா, சோபியா ஆகியோர் கடந்த 6 ஆண்டு களாக பயிற்சி அளித்து வருகின்றனர். 300 வளரும் கலைஞர் களை பரத நாட்டியம் கற்று தந்துள்ளனர்.
தொடர்ந்து 3 மணிநேரம் பரத நாட்டியம் ஆடிய பிரதிக்ஷா தர்ஷினி யின் நிகழ்ச்சியில் குரு ரதீஷ், சோபனா நட்டுவாங்கம் செய்ய, பாடகி சுதா மற்றும் ஸ்ரீ சாய் பாடல்களை பாடினர். பாலக்காடு சேகர், சூரிய உபேந்திர நரசிம்மன் மிருதங்கம் வாசித்தனர். பாக்கலா ஜெயபிரகாஷ் வயலின், புல்லாங்குழல் சஞ்சய் சசிதரன், ஆகியோர் வாசித்தனர். ஸ்ரீ கிருஷ்ணன், சுமதி ஹரி கிருஷ்ணன் சிறப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக நிருத்தியர்பணா நாட்டிய அகாடமி டைரக்டர் தாட்சாயிணி, தரங்கிணி டைரக்டர் சோபனா பாலசந்திரா, பாரதீய வித்யா பவன் டைரக்டர் ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தயா கிருஷ்ணன் வரவேற்றார்.

Click for PDF Version