பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி

சென்னை, அக். 9-
45 கி.மீ. தூரம் வேகத்தில் இயக்கிய பின்பு பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் தானாகவே காற்று மூலம் ரீ-சார்ஜ் செய்து கொள்ளும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்த ராஜேந்திர பாபுவுக்கு சிங்கப்பூர் ஆராய்ச்சி நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இத்தொழில் நுட்பத்தில் காற்றை அடிப்படையாக கொண்ட சார்ஜிங் யூனிட் மூலம், வண்டி ஓடும்போது பேட்டரியை ரீ-சார்ஜ் செய்ய முடியும்.
உதாரணத்திற்கு கார் பேட்டரிகள் ஒரே நேரத்தில் சார்ஜ் மற்றும் டிஜ்சார்ஜ் செய்யும் வகையில் வாகனத்தில் காற்றை அடிப்படையாக கொண்ட யூனிட் அமைக்கப்படும்.
குறைந்த அளவிலான முதலீட்டுடன் சோதனை முறை மோட்டார் சைக்கிள் 350 கிலோ எடையுடன் 7 அடி நீளத்தில் மினி காரை உருவாக்கினேன். இப்பரிசோதனையில் புதிய கண்டு பிடிப்பால் 45 கி.மீ. வேகத்தில் செல்லும்போது பேட்டரி ரீசார்ஜ் ஆவது சாத்தியம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இப்புதிய தொழில் நுட்பத்தால், பேட்டரியில் இயங்கும் கார், சார்ஜ் குறைந்தவுடன் மீண்டும் மின்சாரத்தில் சார்ஜ் செய்ய வேண்டியதில்லை என்றார் ராஜேந்திரபாபு.
மேலும் அவர் கூறுகையில், என்னுடைய கண்டுபிடிப்பை பயன் படுத்துவதால் எலக்ரிக் வாகனங்களை எரிபொருளால் இயங்கும் வாகனங் களுக்கு இணையாகவும் மிக குறைந்த விலையில் கிடைக்கும்.நான் ஒரே பிரதான பேட்டரியை பயன்படுத்தி அதை நான்கு பேட்டரிகளுக்கு இணையாக உருவாக்குவதால், குறைந்த எடையுடன் அதிக சக்தியை பெறலாம் என்றார் அவர்.