சினிமா

‘‘கார்பரேட் நிறுவனங்களுக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம்’’

சமூகம் சார்ந்த பொறுப்புணர்வுடன், கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று ‘மெர்க்குரி’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவுறுத்தியுள்ளார்.. கார்த்திக் சுப்புராஜ், கோவையில் உள்ள தனியார் திரையரங்கு ஒன்றில், நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வசனமே இல்லாத ‘மெர்க்குரிக்கு’ மக்களிடம் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் கூறினார். கார்ப்ரேட் க்ரைம்களால் ஏற்படும் பாதிப்பை, மெர்க்குரி படம் பேசுகிறது. இது, வெகுஜன மக்களை நிச்சயம் கவரும். உலகத்தையே கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆக்கிரமித்து இருக்கின்றன.

சீர்காழி சிவசிதம்பரம், சங்கர்கணேஷ், சின்னிஜெயந்த் பெண் இசையமைப்பாளர் ரெஹானாவுக்கு விருது

வசனமில்லா திகில் படம் ‘மெர்க்குரி’ பிரபுதேவாவை உருமாற்றிய கார்த்திக் சுப்பாராஜ்!