போஸ்டர் செய்தி

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாவட்டங்கள்

திருவனந்தபுரம்,ஆக.10–

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால், இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வெள்ளநீர் செல்ல வழியில்லாததால் ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். வயநாடு, கோழிக்கோட்டில் தீயணைப்பு வீரர்களுடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 24 அணைகளில் இருந்தும் உபரிநீரைத் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளில் முதன் முறையாக இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மழைக்குப் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கேரளாவில் தொடர் மழை பெய்து வருவதால் யாரும் அந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டாம் என நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இது போல் கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள், வெளிமாவட்ட தோட்ட தொழிலாளர்கள் வர வேண்டாம் என்றும் கேரள அரசு கேட்டு கொண்டுள்ளது. கனரக வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.இடுக்கி மாவட்டத்தில் 13 பேர் இறந்துள்ளனர். தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இருவர் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். இடுக்கி தாலுகாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், கண்ணூரில் 3 பேரும், வயநாடு மாவட்டத்தில் 2 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேரும் நிலச்சரிவு மற்றும் மழைக்குப் பலியாகியுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது. இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ள போதிலும், அணைக்கு வரும் நீரின் அளவு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

வயநாடு, கோழிக்கோட்டில் தீயணைப்பு வீரர்களுடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *