செய்திகள்

பார்லிமெண்ட் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம்

பொன்னேரி, ஆக.10–

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்வோம் என்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட அண்ணா தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் சூளுரைக்கப்பட்டது.

அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற தேர்தல் பணிக்குழு மற்றும் பூத் கமிட்டிகள் அமைப்பது சம்பந்தமாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பொன்னேரி ஆர்.ஆர் திருமணமண்டபத்தில் மாவட்டச் செயலாளர் சிறுணியம் பி. பலராமன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான பி. தங்கமணி, ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க. பாண்டியராஜன், எம்.எல்.ஏ.க்கள் பி.எம்.நரசிம்மன், கே.எஸ்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செவ்வை மு.சம்பத்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான என்.எஸ்.ஏ. இரா.மணிமாறன் ஆகியோர் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர்.

மாவட்ட கழக அவைத்தலைவர் தி.ப.கண்ணன், மாவட்ட கழக இணைசெயலாளர் ஆர்.விஜயலட்சுமி ராமமூர்த்தி, மாவட்ட கழக துணை செயலாளர் எம்.பொம்மி முனுசாமி, மாவட்ட பொருளாளர் செவ்வை.பி.ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய கழக செயலாளர்கள் கே.ஏ.மோகனவடிவேல், பி கார்மேகம், வி.கோபால் நாயுடு, காட்டுப்பாக்கம் ஜி.திருநாவுக்கரசு, புட்லூர்.ஆர்.சந்திரசேகர், இ.கந்தசாமி, சூரகாபுரம்.எஸ்.சுதாகர், என்.சக்திவேல், இ.என். கண்டிகை ரவி, ட்டி.டி.சீனிவாசன், பேரவை செயலாளர்கள் ஒய்.பட்டாபிராமன், எ.எம்.தயாளன், பொதுக்குழு உறுப்பினர் வி.பொன்னுதுரை, நகர செயலாளர்கள் ஜி.கந்தசாமி, ட்டி.சௌந்தர்ராஜன், ட்டி.தேவேந்திரன், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.கே.சேகர், பேரூர் கழக செயலாளர்கள் கும்மிடிபூண்டி மு.க.சேகர், திருமழிசை என்.எஸ்.பிரகாஷ், பள்ளிப்பட்டு இரா.சண்முகம் ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

காவிரி நதிநீர் பிரச்சனையில் காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று இறுதி ஆணையை பிறப்பித்தது. இந்த இறுதி ஆணை வெளியிட்ட பின்னர் நான்கு ஆண்டு காலம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க. அரசு காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட ஒரு துரும்பகை் கூட கிள்ளிப்போடவில்லை. 2011ல் அம்மா ஆட்சிப் பொறுப்பேற்றதும் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தியதன் காரணமாக 19.2.2013ல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

அம்மாவின் வழியில் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் தமிழக அரசு நடத்திய பல்வேறு சட்டப் போராட்டங்களின் பயனாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைத்து மதிய அரசிதழில் வெளியிட்டது.

தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சனையான காவிரி பிரச்சனையில் நமது உரிமைகளை நிலைநாட்டி நாட்டின் தானியக் களஞ்சியமான தஞ்சை உள்பட 12 மாவட்டங்களின் விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியதற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பாராட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

8 வழி சாலைக்கு வரவேற்பு

புரட்சித் தலைவி அம்மாவின் ஆசியுடன் நடைபெறும் பொற்கால ஆட்சியில் இந்திய துணைக் கண்டத்தில் முதன்முறையாக உலகத்தரத்திலான 8 வழிச்சாலையை அறிவித்து அதற்குரிய ஆக்கப்பூர்வ பணிகளை துரிதமாக மேற்கொண்டு இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் இத்திட்டத்தினை பாராட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னோரி தொகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் பொன்னோரி அரசு மருத்துவமனைக்கு சுமார் ரூ.25 கோடியும், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக் கூடங்கள் கட்ட ரூ.3 கோடியும், உள்ளாட்சித்துறை மூலம் பொன்னேரி பேரூராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.44 கோடியும் மின்சார துறை மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்த சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரையும் பாராட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

பிளாஸ்டிக்பொருள் ஒழிப்பு

அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்து வரை அறவே ஒழிக்கும் பொருட்டு அதற்குரிய விழிப்புணர்வு கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்த உத்தரவிட்டு அம்மாவின் அரசு எடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும் கழக தொண்டர்களாகிய நாமும், பொதுமக்களிடத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்று இதன் மூலம் உறுதிமொழி எடுத்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி உட்பட 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் தலைமைக் கழகம் அறிவிக்கும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றிபெறச் செய்ய அல்லும் பகலும் அயராமல் பாடுபட்டு அம்மா கண்ட கனவை நிறைவேற்ற, போட்டியிடும் 40 தொகுதிகளிலும் எதிரிகளை தேர்தல் களத்தில் வீழ்த்தி கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வேம் என உறுதியேற்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரித் தொகுதியில் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகள் விரைவில் கட்டி முடித்து சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பயன்பெறவும் உத்தரவிட்ட தமிழக அரசை பாராட்டி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த 3 மாத காலத்திற்குள் அரசு ஒப்புதலுடன் தேர்தல் நடத்தப்படும் என்ற சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க நாம் தயாராக இருக்க தேவையான தேர்தல் ஆயத்தப்பணிகளை ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடும் ஆணைகளை ஏற்று தேர்தல் பணியாற்றிக் கழகம் அமோக வெற்றிபெற அயராது பாடுபடுவோம்.

எதிரிகளை வீழ்த்துவோம்

தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்து பணியை துவக்கி வைத்து சுமார் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நீர்வள ஆதாரத்தைப் பெருக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கி பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழ்நாடு அரசின் குடிமராமத்து பணி ஆண்டுதோறும் தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் உறுப்பினர் தேர்தலில் திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகம் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக திகழ, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் கழகத்தை கட்டிகாத்து, எதிரிகளை தேர்தல் களத்தில் வீழ்த்துவோம் என சபதமேற்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் பொன்னேரி பேரூர் கழக செயலாளர் ஒய். உபயதுல்லா நன்றி கூறினார்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *