செய்திகள்

சென்னை கோட்டை அருகே சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை

சென்னை, ஆக.10-

சுதந்திர தின விழாவையொட்டி கோட்டை அருகே இன்று அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

தமிழக அரசு சார்பில் சுதந்திர தின விழா வருகிற 15ந்தேதி அன்று சென்னை கோட்டையில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா சிறப்புரை ஆற்ற உள்ளார்.

சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை கோட்டை முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) காலை பாதுகாப்பு மற்றும் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாளையும் (சனிக்கிழமை), வருகிற திங்கட்கிழமை அன்றும் இதே போன்று பாதுகாப்பு மற்றும் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் காலை 6.30 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரையில் நேப்பியார் பாலத்தில் இருந்து போர் நினைவுச்சின்னம் வரை அமைய பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்குப்பகுதி வரை அமைய பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களில் போக்குவரத்து தடை செய்யப்படும். இதையொட்டி போக்குவரத்து மாற்றமும் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *