வாழ்வியல்

நமது உடலின் வெப்பத்தை தணிக்க உதவும் உணவுகள்–1

பொதுவாக ஒருவருக்கு உடல் வெப்பமானது 98.6 டிகிரி இருக்கும். அதுவும் இந்த வெப்பநிலை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் இதனை விட அதிகமான அளவில் வெப்பமானது உடலில் அதிகரித்தால், அது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும்.

எனவே உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டுடன் வைப்பது என்பது மிகவும் முக்கியமானது.தற்போது கோடைகாலம் என்பதால், உடல் வெப்பமானது அளவுக்கு அதிகமாகும் வாய்ப்புள்ளது. இத்தகைய வெப்பம் உடலில் வெப்பத்தை மட்டும் அதிகரிக்காமல், வயிற்று வலி, அரிப்புக்கள், பிம்பிள், மயக்கம் மற்றும் சோர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

எனவே இத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு உடலில் வெப்பத்தை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, அதிகமான தண்ணீர் மற்றும் பழங்களால் செய்யப்பட்ட பானங்கள் குடிப்பது என்பனவற்றை பின்பற்ற வேண்டும்.

சரி, இப்போது உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, இதனை உணவில் அதிகம் சேர்த்து, உடல் வெப்பத்தை தணிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.

* தர்பூசணி

நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் வெப்பமானது தணிவதோடு, உடல் வறட்சியும் நீங்கும்.

* முலாம் பழம் உடல் வெப்பத்தை தணிக்கும் பழங்களில் முலாம் பழம் மிகவும் முக்கியமானது. இந்த பழம் மிகவும் குளிர்ச்சி தன்மை நிறைந்தது. இதனை ஒர நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், சிலருக்கு அதில் உள்ள குளிர்ச்சியால் காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படும்.

* வெள்ளரிக்காய்

கோடையில் அதிகம் கிடைக்கும் உணவுப் பொருட்களில் வெள்ளரியும் ஒன்று. இதில் நீர்ச்சத்து அதிம் இருப்பதால், இது உடல் வறட்சியை குறைப்பதோடு, உடல் வெப்பத்தையும் தணிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *