வாழ்வியல்

முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

முட்டை சாப்பிடுவதால் பல உடல்நலப் பயன்கள் இருப்பதால் தினமும் ஒரு முட்டை சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். முட்டையில் உயர்ந்த தரத்திலான புரதச்சத்து உள்ளது. ஒரு முழு முட்டையின் மஞ்சள் கருவில் 6 கிராம் புரதம் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டான லூடின், ஜியாக்ஸ்யந்தின் போன்றவை உள்ளன. இவை தவிர, வைட்டமின் இ,டி,ஏ ஆகியவையும் உள்ளன. மேலும், தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் ஆகியாவையும் உள்ளன.

முட்டை சாப்பிடுவதால் இயற்கையாகவே நேர்மறையான விளைவுகள் உடலுக்கு ஏற்படுகிறது. இதிலுள்ள புரதச் சத்துகள், ஆன்டி ஆக்சிடென்டுகள், உடலுக்கு ஊறு விளைவிக்கும் மன அழுத்தம், உடல்ரீதியான பிரச்னைகளை சரிசெய்து விடுகிறது. புரதச் சத்தானது உயர் ரத்த அழுத்தத்தை சமன்செய்ய பெரிதும் பயன்படுகிறது.

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வருபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 12 சதவிகிதம் குறைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவித்த முட்டை, ஆம்லெட், ஆப்பாயில் என பிடித்த வடிவில் முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முட்டைகள் வரை சாப்பிடலாம். மஞ்சள் கருவைச் சாப்பிடுவதாக இருந்தால் தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும். ஆரோக்கியமாக வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *